Friday, December 19, 2014

மத்தியிலே கல்விக்கோர் அமைச்சர் இவரே மறவாதீர் அவருக்கே இல்லை நிகரே!



மத்தியிலே கல்விக்கோர் அமைச்சர் இவரே
     மறவாதீர் அவருக்கே இல்லை நிகரே!
புத்தியிலே நமக்கெல்லாம் என்றே நாளும்
    புலம்புகின்றார் கண்டபடி பாவம்! மேலும்,
எத்னையோ பணியிருக்க அதனை விட்டே
    எண்ணாமல் ஆயாமல் வேலைக் கெட்டே!
பித்தமது பிடித்தவராய் மாற்றி வீணே
    பேசுகின்றார் ஐயகோ! நியாயம் தானோ!?


ஆண்டாண்டு காலமாக  இருக்கும்  ஒன்றே
      அறியாது ஐயகோ  மாற்றல்  என்றே!
தூண்டாதீர்  மதவெறியை  அமைதி  கெடுமே
      தொடராது  இனியேனும்  வாழ  விடுமே!
வேண்டாத  வீண்வேலை ஆகும் தானே
       விடுமுறையே இல்லையென பின்பு, தானே
கூண்டா மக்களது  எதிர்புக்   கண்டே
      கூறவில்லை என்பதுவா  மக்கள்  தொண்டே!

 புலவர் சா இராமாநுசம்

16 comments:

  1. அருமையான கவி பதிவு. ஒன்றே செய்ய வேண்டும் என்று உறுதியாய் உள்ளார் இந்த அமைச்சர். ஆனால் நன்றே செய்ய வேண்டும் என்பதை மறந்து விடுகின்றாரே.

    ReplyDelete
  2. அருமையான க்விதை ஐயா! கருத்து மிக அருமை, இப்போது மிகத் தேவையான ஒன்றும் கூட...

    ReplyDelete
  3. நல்ல கவிதை. அவருக்குப் புரிந்தால் சரி.

    ReplyDelete
  4. மெல்ல நூல் விட்டுப் பார்க்கிறார்கள் அய்யா !
    த ம 2

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா.
    சொல்ல வேண்டிய விடயத்தை கவியாக வடித்த விதம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. கல்விக்கோர் அமைச்சர்.....
    விசயம் தெரியாமல் படித்தேன் புலவர் ஐயா.

    ReplyDelete