மாண்புமிகு முதல்வரே எண்ணிப் பாரீர்-இன்றே
மனம்குமுறும் மக்கள்துயர் ஆய்ந்து காரீர்!
மீண்டுமிங்கே விலைவாசி உயர்ந்து போக-மேலும்
மின்சாரக் கட்டணமோ எமனாய் ஆக!
வேண்டிபலர் விண்ணப்பம் தந்தும் வீணே -ஏதும்
விடிவில்லை! முடிவதுவே! வேதனை தானே!
ஆண்டவனே !என்றிங்கே மக்கள் நாளும்-எண்ணி
அல்லல்படல்! விதுயென்ப! இதுதான் போலும்!
ஆற்றாது அழுகின்ற அவலம் நன்றா -இதுவும்
ஆளுகின்ற அரசுக்கு அழகாம் என்றா?
சாற்றாது சத்தமின்றி ஏற்றி விட்டீர் –அந்தோ!
சரியல்ல! போராட தூண்டி விட்டீர்!
ஊற்றான ஊழலையே ஒழித்தால் போதும் -மேலும்
உயர்த்திடவே தேவையில்லை! நீங்கும் தீதும்!
மாற்றாகும் இவ்வழியே! செய்தல் வேண்டும் -என்றே
மன்றாடிக் கேட்கின்றோம் மீண்டும் மீண்டும்!
புலவர் சா இராமாநுசம்
வேண்டிபலர் விண்ணப்பம் தந்தும் வீணே -ஏதும்
ReplyDeleteவிடிவில்லை! முடிவதுவே! வேதனை தானே!
ஆண்டவனே !என்றிங்கே மக்கள் நாளும்-எண்ணி
அல்லல்படல்! விதுயென்ப! இதுதான் போலும்! //
அருமை ஐயா...காது கொடுத்து அவர்கள் கேட்டால் எல்லோருக்கும்...நலம் பயக்கும்.
தம 1
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteஊழலை ஒழிப்பதை விடுத்து. இப்படி அடிப்படை தேவைகள் மீதான விலைவாசிகளை ஏற்றுவது முறையா ? இது தான் ஆளும் அழகா ? மிகச்சரியாக கேட்டீர்கள் ஐயா.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteஆமாம் ஐயா!
ReplyDeleteஎவ்வளவுதான் கோரிக்கைவைத்தாலும் அவர்கள்
காதில் விழுந்தாற்தானே!..
நல்ல ஆதங்கக் கவிதை ஐயா!
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteமின் கட்டணம்
ReplyDeleteபெரும் சுமையாகத்தான்
மாறிக் கொண்டிருக்கிறது ஐயா
தம 5
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம்
ReplyDelete“ஐயா
காலம் உணர்ந்து கவி வடித்த விதம் கண்டு மகிழ்ந்தேன். பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பருவமாறிந்து பருவச்சிறகை விரித்தேன்.:
கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்புடன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மக்களின் சார்பான விண்ணப்பம் சரியே
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteநல்லது நடந்தால் சரி தான் ஐயா...
ReplyDeleteகவிதை அருமை ஐயா...
ReplyDelete