Saturday, November 8, 2014

என், முகநூலில் வந்தவை ! வலையில் படிக்கத் தந்தவை !





வாள்முனைப் பெரிது என்றான் நெப்போ லியன்
பேனாமுனைப் பெரிது என்றான் வால்டேர்
அறிவு முனைப் பெரிது என்றார் பெர்னாட்சா
ஒழுக்கமே பெரிது என்றார் திருவள்ளுவர்
ஒழுக்கமில்லாத்தவன் கையில் உள்ள வாளும்
பேனாவும் அவனது அறிவும் பயனற்றதாகும்!

சிரியுங்கள் அது நெஞ்சின் இசை
சிந்தியுங்கள் அது ஆற்றலின் ஊற்று
படியுங்கள் அது அறிவின் வளர்ச்சி
உழையுங்கள் அது வெற்றியின் இரகசியம்
விளையாடுங்கள் அது இளமையின் கொடை!

கல்லில் உயிர் உறங்குகிறது
தாவரத்தில் உயிர் அசைகிறது
விலங்குகளில் உயிர் வெளிப்படுகிறது
மனிதனிடம் உயிர் வேலை செய்கிறது
மகானிடம் உயிர் பணி செய்கிறது

புலவர்  சா  இராமாநுசம்

13 comments:

  1. சுவையாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கு மிக்க நன்றி!

      Delete
  2. அனைத்தும் அற்புதமான வைர வரிகள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கு மிக்க நன்றி

      Delete
  3. \\\\மனிதனிடம் உயிர் வேலை செய்கிறது
    மகானிடம் உயிர் பணி செய்கிறது//
    அருமை. அய்யா.

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கு மிக்க நன்றி

      Delete
  4. மிகவும் அருமையான கவிதை ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கு மிக்க நன்றி

      Delete
  5. தங்களது புதிய பதிவு உங்கள் தளத்தில் இல்லை... டாஷ்போர்டில் மட்டுமே காட்டுகிறதே ஐயா...

    ReplyDelete
  6. சீர்மிகு வரிகளால்
    சிறப்புற தொடுக்கப்பட்ட
    சிறந்த கவிகள் பெருந்தகையே...

    ReplyDelete
  7. அனைத்தும் அருமை பொன் மொழிகளே
    தாங்கள் அளித்ததும் அவ்விதமே பதிவுக்கு நன்றி!
    தொடர வாழ்த்துக்கள்....!
    நானும் தங்கள் ஆலோசனைப்படிகவிதையை சுருக்கியுள்ளேன் மிக்க நன்றி !

    ReplyDelete
  8. அத்தனையும் அருமை

    ReplyDelete

  9. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete