Friday, November 28, 2014

பொல்லாதாம்! என்றே புகல் !




சாதியெனும்  தீயிங்கே சாகாமல் தானிருக்க
நீதியெனும் ஒன்றெங்கோ  போயிற்றாம் –ஆதியிலே
இல்லாத  ஒன்றலவா ஏனிந்த வன்கொடுமை
பொல்லாதாம்! என்றே புகல்

19 comments:

  1. அருமையான கவிதை ஐயா. என்று தணியும் இந்த சாதி வெறி என்று தோன்றுகின்றது....

    ReplyDelete
  2. உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்விலாத நிலை அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட புலவர் அய்யாவுக்கு வாழ்த்துக்கள்!
    த.ம.1

    ReplyDelete
  3. கவிதை அருமை ஐயா...
    இப்போ கண் பிரச்சினை எப்படியிருக்கிறது ஐயா...

    ReplyDelete
  4. சாதியினால் பகைமை உணர்வே மிஞ்சும்.

    ReplyDelete
  5. சாதி ஒழியும் நாளில் நீதி நிலைக்கும். நல்ல கருத்துள்ள வரிகள் நன்றிங்க ஐயா. உடல் நிலை எப்படி இருக்கிறது ?

    ReplyDelete
  6. நல்லா சொன்னீங்க அய்யா.!

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா!

    சாதியாம் இந்தச் சகதி அகற்றவே
    ஓதிய வெண்பா உயர்வு!

    அருமை ஐயா!
    உடல் நலம் தற்போது எப்படி ஐயா?

    ReplyDelete
  8. அருமை ஐயா
    சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லிக் கொடுக்க
    சாதிச் சான்றிதழ்களை அல்லவா பள்ளிகள் கேட்கின்றன

    ReplyDelete
  9. வெண்பாஅருமை! இந்த சாதிக் கொடுமை என்று தீருமோ தெரியவில்லை!

    ReplyDelete
  10. அருமையான பா...

    என்று ஒழியும் சாதி மோகம்....

    த.ம. ஏழு.

    ReplyDelete