Thursday, November 20, 2014

தேடிக் கொணர்ந்த திரு !



கோடி இருந்தென்ன கோபுரம்போல் வீடதனில்
மாடி இருதென்ன மாண்புடனே – நாடியதும்
ஓடி உவந்துவரும் உற்றதுணை யானவளே
தேடிக் கொணர்ந்த திரு

புலவர்  சா   இராமாநுசம்

21 comments :

  1. மரணம் என்பது தவிர்க்க முடியாதது... மனைவியின்றி முதுமையில் வாழ்தல் கொடுமையானது என்பது தெரிகிறது....

    ReplyDelete
  2. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  3. பொருள் பொதிந்த வெண்பா! அருமை! நன்றி!

    ReplyDelete
  4. வெண்பா இது மனத்தின் புண்பா!அருமை தலைவரே!

    ReplyDelete
  5. எவ்வளவு அழகான ஆழமா கருத்தை ஒரு சிறு
    வெண்பாவில் புதைத்து விட்டீர்....!

    சூப்பர் புலவர் ஐயா.

    ReplyDelete
  6. அருமையான வெண்பா

    ReplyDelete
  7. அன்பான தம்பதிக்குள் யார் முதலில் காலமானாலும் ,இருப்பவர் பாடு கஷ்டம்தான் அய்யா !
    த ம 6

    ReplyDelete
  8. ஆழமான உணர்வுகளை
    அழுத்தமாகச் சொல்லிப் போகும் வெண்பா
    இதனைப் படித்தவர் அனைவரும் நிச்சயம்
    பிரிவின் அருமை உணர்வர்

    ReplyDelete
  9. பெற்ற தாய் தந்தையர் போல் உற்ற துணையும் ஒரு பேறே!
    அவர்களின் பிரிவு கொடுமை!..

    உணர்வுமிகு வெண்பா ஐயா!

    ReplyDelete
  10. அய்யா.வணக்கம்.!துணையை இழந்து,புண்பட்ட மனங்களுக்கு மருந்தாய் ஒரு வெண்பா!
    வாருங்கள் 'எண்ணப்பறவை' க்கு

    ReplyDelete
  11. நாடியதும் உம்நாவில் “ நானிருப்பேன்“ என்றுசொலி
    ஓடிவரு ஒண்டமிழாள் உற்றினிக்க - வாடியுதிர்
    இப்பிறவி போன இழப்பே நினைவதுவோ?
    எப்பொழுதும் உம்மோ டெழுத்து!!!

    ReplyDelete
  12. இயற்கையின் விதியை மற்றுமோ விதி என்று
    ஆறுதல் பல சொன்னாலும் --ஈடானா
    நாட்டம் கொண்டவள் போனபின்
    கணினியே கன்னியாக காதலாகக் கொண்ட
    புலவரே!ராமானுஜரே!தமிழன்னைக்கு சேவையே உனக்கு
    பல்லாண்டு தரும் வாழ்வு.

    ReplyDelete
  13. சிந்திக்க வைக்கும் வெண்பா...

    ReplyDelete
  14. அடிகள் மனதில் பதிந்துவிட்டன. யதார்த்தத்தை மிகவும் நுட்பமாகக் கூறியுள்ளீர்கள்.

    ReplyDelete
  15. தங்களது துயர வரிகளைப் படித்தவுடன் “பார் மகளே பார் பார் மகளே பார்” என்ற திரைப்பட பாடலில் வரும்

    தந்தை வாழ்வு முடிந்து போனால்
    தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை
    தாயின் வாழ்வு மறைந்து போனால்
    தந்தைக்கென்று யாருமில்லை

    என்ற வரிகள்தான் நினைவுக்கு வந்தன. பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் பார்த்து ஆறுதல் கொள்ளுங்கள்.
    த.ம.10

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...