Wednesday, November 19, 2014

எண்ணில் சிறப்பாம் இயம்பு !



உள்ளொன்று வைத்தே உறவாடி நட்பாகும்
கள்ளமனம் கொண்டாரைக் காண்பீரேல் –எள்ளியவர்
கண்ணில் படாமல் கடந்தேநாம் போவதுவே
எண்ணில் சிறப்பாம் இயம்பு

புலவர்  சா  இராமாநுசம்

20 comments :

  1. சிறப்பான கருத்து ஐயா. ஒதுங்கி போவது தான் சரி.

    ReplyDelete
  2. அருமை.

    துஷ்டரைக் கண்டால் தூர விலகுவோம்!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      அருமையாக இருக்கின்றது!..

      சிறப்பென இஃதையும் சிந்தையிற் கொள்வோம்!
      பிறக்கும் அனுபவத்தைப் பெற்று!

      Delete
  4. நல்ல கருத்து! ஆம்! துஷ்டரைக் கண்டால் தூர விலகு! அருமை!

    ReplyDelete
  5. உள்ளதைச் சொன்னீர்கள். அதுவும் நல்லதையே சொன்னீர்கள் நன்றிங்க ஐயா.

    ReplyDelete
  6. நல்ல கருத்துள்ள வெண்பா! பகிர்வுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. சகதியில் குளித்து வரும் எருமையைக் கண்டு விலகுவது போல் ,இவரைப் போன்றோரைக் கண்டாலும் சடுதியில் விலகிட வேணும் அய்யா !
    த ம 6

    ReplyDelete
  8. கனவில் வந்த காந்தி

    மிக்க நன்றி!
    திரு பி.ஜம்புலிங்கம்
    திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

    புதுவைவேலு/யாதவன் நம்பி
    http://www.kuzhalinnisai.blogspot.fr

    ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

    ReplyDelete
  9. வணக்கம்
    ஐயா
    காலம் உணர்ந்து பா வடித்த விதம்கண்டு மகிழ்ந்தேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. இன்றைய சூழலில் அவசியமான கருத்து
    தினம் ஒரு இதம் தரும் வெண்பாவை
    தொடர வேண்டி வாழ்த்தி

    ReplyDelete
  11. அணியும் அறிந்ததில்லை சீரும் தெரியாது ,
    எழுதுவதோ தமிழ் எழுத்தாணி கால மேது
    எண்ணுவதை வெளியிட்டு நானே போற்றும் பித்தன் நான்
    தங்கள் வெண்பாவால் நாணிக்குறுகி
    பாராட்டும் தகுதியின்றி பால்லாண்டுவாழ
    பலதமிழ் மரபு குன்றா வெண்பா எழுத வாழ்த்தவயதின்ரி
    வேண்டுகிறேன் இறைவனையே இன்று.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...