Tuesday, November 18, 2014

நித்தம் ஒருவெண்பா நிச்சியமாய் நானெழுத



நித்தம் ஒருவெண்பா நிச்சியமாய் நானெழுத
சித்தம் வைத்திட்டேன் செம்மொழியில்! –எத்தனைபேர்,
காண்பாரோ நானறியேன்! கண்டே, எனையூக்க
தூண்டிவிடு வாரா தொடர்ந்து

புலவர்  சா  இராமாநுசம்

27 comments:

  1. ““தூண்டத் துலக்குவதே தெய்வதமி ழாயிருக்க
    வேண்டல் நடத்தாளோ வெண்புலவ ? --- தீண்ட
    இனிக்குமவள் சொற்கள்! இலக்கணமாந் தீயுள்
    பனிக்குளுமை நல்குகஉம் பாட்டு““

    தொடருங்கள் தொடர்கிறோம் அய்யா!
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. ஊக்கமுற என்னுள்ளே ஊன்றியவர் நல்விதையை
      ஆக்கமுற செய்தவநீர் ஆவீராம்! - நோக்கமிக
      தண்டமிழை காப்பதுவே தன்பணியாய் என்றும்
      கொண்டவராம் நன்றேதான் கூறு

      Delete
  2. உங்கள் தொடர் முயற்சி
    எங்களுக்கு நல்ல பயிற்சி
    தொடர்கிறோம்.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நிச்சயமாக தொடருங்கள் தொடர்ந்து ஊக்கம் தர வருவோம் .
    வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  4. அய்யாவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ரசிப்பதற்கும் ருசிப்பதற்கும் நாங்கள் தயாராகவிருக்கின்றோம். நீங்கள் தொடருங்கள் ஐயா

    ReplyDelete
  6. எழுதுங்கள் ஐயா! நாங்கள் எல்லொரும் இருக்கின்றோமே! தமிழ் சுவையை ரசிக்க!

    ReplyDelete
  7. அருமையான வெண்பாவோடு ஆரம்பம் ஐயா!
    கரும்பு தின்னக் கூலியா?.. நிச்சயம் எங்கள் ஆதரவு உண்டு!

    நிறைய விடயங்கள் உங்களிடம் இருக்கிறதே.
    ஒவ்வொன்றாக வெண்பாவிற் பதிவிடுங்கள்!

    வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  8. எனக்கு ரசிக்க மட்டுமே தெரியும்! :)))

    ReplyDelete
  9. வெண்பாக்களை ரசிக்கவும் ருசிக்கவும் நாங்கள் ரெடி! தொடருங்கள் ஐயா!

    ReplyDelete
  10. வெண்பா பாட வந்த நன்பா புலவருக்கு வாழ்த்துக்கள்!
    த.ம.7

    ReplyDelete
  11. Replies
    1. தள்ளா வயதில் தளரா மனமுடன்
      புள்ளெனப் பாடும் புலவரே! – தெள்ளுதமிழ்ச்
      சீரோங்க பாடுவீர்! செம்மையாய் எந்நாளும்
      ஓர்வெண்பா போதுமோ? ஓது!

      Delete
  12. என் பாணியில் தினசரி பதிவா ?நச்சென்று நாலு வரி எழுதினாலும் போதும் அய்யா !
    த ம 1

    ReplyDelete
  13. தங்கள் வெண்பா கசக்குமா என்ன? ,புதுக் கவிதைகள் பார்த்துப் புளித்துப் போன நிலையில் தங்களின் மரபுக் கவிதைகள் உண்மையில் தமிழ் வளர்க்கத் துணை புரியும்

    ReplyDelete
  14. தினம் ஒரே ஒரு வெண்பா மட்டுமே என்பதை மிகவும் கண்டிக்க வேண்டியவனாகிறேன்....குறைந்த பட்சம் ஐந்து வெண்பாக்கள் இருக்க லாமே !

    ReplyDelete
  15. வெண்பா - தினமும் எழுதுங்க ஐயா...
    நாங்கள் வாசித்து மகிழ்கிறோம்...

    ReplyDelete