Friday, November 14, 2014

குழந்தைகள் தினம் !


குழந்தைகள் தினம்
----------------------------------
சின்னஞ் சிறுக்குழவி
சிங்கார இளங்குழவி
கன்னம் குழிவிழவும்
களுக்கென்று நீசிரிப்பின்
அன்னை முகமாகும்
அன்றலரும் தாமரைபோல்
தன்னை மறந்ததவளும்
தாலாட்டுப் பாடுவாளாம்


பூவின் இதழ்போல
பொக்கை வாய்விரிய
நாவின் சுவைஅறிய
நறுந்தே னைதடவிட
பாவின் பண்போல
பைந்தமிழ் சுவைபோல
காவின் எழில்போல
களிப்பாயே தேன்சுவையில்

கண்ணே நீ உறங்கு
கற்கண்டே நீ உறங்கு
விண்ணில் தவழ்கின்ற
வெண்மதியே நீ உறங்கு
வண்ண மங்கா மல்
வரைந்தநல் ஓவியமே
மண்ணை வளமாக்கும்
மழையே நீயுறங்கு

கொஞ்சும் மழலைக்கோர்
குழலிசையும் ஈடாமோ
பஞ்சின் மெல்லிய சீர்
பாததில் நீ நடப்பின்
அஞ்சிடும் அன்னைமனம்
அடிதவறி விழுவாயென
நெஞ்சிலே சுமந் திடுவாள்
நீவளரும் வரை யவளே

புலவர் சா இராமாநுசம்

22 comments:

  1. அஞ்சிடும் அன்னை மனத்தை அழகாய் படம் பிடித்துக் காட்டிய கவிதையை ரசித்தேன் !
    த ம 1

    ReplyDelete
  2. ஸ்ட்ரெஸ் ரிலீவர்கள்! :) :)

    ReplyDelete
  3. அருமை ஐயா! குழவியின் கீதம் இனித்தது! இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா!

    சின்னக் குழந்தையின் சீர்கண்டு பாவியற்றிப்
    பொன்னை நிகரான பூசொரிந்தீர்! - அன்னை
    அவளுணர்வை அள்ளி அளித்தீரே ஐயா!
    கவருதே!.உம் கன்னற் கவி!

    அருமையான பாடல் ஐயா!
    குழந்தைகள் தின நல் வாழ்த்துக்கள்!

    த ம.4

    ReplyDelete
  5. தன்னை மறந்ததவளும்
    தாலாட்டுப் பாடுவாளாம்//உண்மைதான் அய்யா

    ReplyDelete
  6. குழந்தைகள் தினக் கவிதை மிகச் சிறப்பு.....

    த.ம. +1

    ReplyDelete
  7. கவி கண்டு மகிழ்ந்தேன் ஐயா
    நன்றி

    ReplyDelete
  8. குழந்தைகளுக்கான இன்னிசைக் கவிதை பெருந்தகையே...

    ReplyDelete
  9. குழல் இனிது யாழ் இனிது குழந்தையை வர்ணிக்கும் தங்கள் கவி இனிது

    ReplyDelete
  10. பாவாலே பகிர்ந்திடும்
    குழந்தைகள் நாள் சிறப்பு
    சிறந்த பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  11. குழந்தைகள் என்றாலே அருமைதானே! ஐயா! அப்போதுமே நம்மை இயங்கக் வைக்கும் திறமை அவர்களுக்கு மட்டுமே!

    அருமையான க்விதை!

    ReplyDelete
  12. மண்ணை வளமாக்கும் --குழந்தைகள் பாரதநாட்டின் வளம்பெருக்கும்
    எதிர்காலச் சிற்பிகள்.விவசாயிகள் பொறியாளர்கள்.என்னே நேசங்கள்

    ReplyDelete