குழந்தைகள் தினம்
----------------------------------
சின்னஞ் சிறுக்குழவி
சிங்கார இளங்குழவி
கன்னம் குழிவிழவும்
களுக்கென்று நீசிரிப்பின்
அன்னை முகமாகும்
அன்றலரும் தாமரைபோல்
தன்னை மறந்ததவளும்
தாலாட்டுப் பாடுவாளாம்
பூவின் இதழ்போல
பொக்கை வாய்விரிய
நாவின் சுவைஅறிய
நறுந்தே னைதடவிட
பாவின் பண்போல
பைந்தமிழ் சுவைபோல
காவின் எழில்போல
களிப்பாயே தேன்சுவையில்
கண்ணே நீ உறங்கு
கற்கண்டே நீ உறங்கு
விண்ணில் தவழ்கின்ற
வெண்மதியே நீ உறங்கு
வண்ண மங்கா மல்
வரைந்தநல் ஓவியமே
மண்ணை வளமாக்கும்
மழையே நீயுறங்கு
கொஞ்சும் மழலைக்கோர்
குழலிசையும் ஈடாமோ
பஞ்சின் மெல்லிய சீர்
பாததில் நீ நடப்பின்
அஞ்சிடும் அன்னைமனம்
அடிதவறி விழுவாயென
நெஞ்சிலே சுமந் திடுவாள்
நீவளரும் வரை யவளே
புலவர் சா இராமாநுசம்
அஞ்சிடும் அன்னை மனத்தை அழகாய் படம் பிடித்துக் காட்டிய கவிதையை ரசித்தேன் !
ReplyDeleteத ம 1
மிக்க நன்றி!
Deleteஸ்ட்ரெஸ் ரிலீவர்கள்! :) :)
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஅருமை ஐயா! குழவியின் கீதம் இனித்தது! இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவணக்கம் ஐயா!
ReplyDeleteசின்னக் குழந்தையின் சீர்கண்டு பாவியற்றிப்
பொன்னை நிகரான பூசொரிந்தீர்! - அன்னை
அவளுணர்வை அள்ளி அளித்தீரே ஐயா!
கவருதே!.உம் கன்னற் கவி!
அருமையான பாடல் ஐயா!
குழந்தைகள் தின நல் வாழ்த்துக்கள்!
த ம.4
மிக்க நன்றி!
Deleteதன்னை மறந்ததவளும்
ReplyDeleteதாலாட்டுப் பாடுவாளாம்//உண்மைதான் அய்யா
மிக்க நன்றி!
Deleteகுழந்தைகள் தினக் கவிதை மிகச் சிறப்பு.....
ReplyDeleteத.ம. +1
ரசித்தேன் ஐயா...
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteகவி கண்டு மகிழ்ந்தேன் ஐயா
ReplyDeleteநன்றி
மிக்க நன்றி!
Deleteதம 8
ReplyDeleteநன்றி!
Deleteகுழந்தைகளுக்கான இன்னிசைக் கவிதை பெருந்தகையே...
ReplyDeleteகுழல் இனிது யாழ் இனிது குழந்தையை வர்ணிக்கும் தங்கள் கவி இனிது
ReplyDeleteபாவாலே பகிர்ந்திடும்
ReplyDeleteகுழந்தைகள் நாள் சிறப்பு
சிறந்த பதிவு
தொடருங்கள்
குழந்தைகள் என்றாலே அருமைதானே! ஐயா! அப்போதுமே நம்மை இயங்கக் வைக்கும் திறமை அவர்களுக்கு மட்டுமே!
ReplyDeleteஅருமையான க்விதை!
மண்ணை வளமாக்கும் --குழந்தைகள் பாரதநாட்டின் வளம்பெருக்கும்
ReplyDeleteஎதிர்காலச் சிற்பிகள்.விவசாயிகள் பொறியாளர்கள்.என்னே நேசங்கள்