இட்டபயிர் போயிற்றே! ஏர்பிடித்தோன் என்செய்வான்
திட்டமென்ன ஆள்வோரே எண்ணுங்கள் –நட்டமதை
ஈடுசெய்ய இல்லைவழி !ஏங்குகின்ற அன்னவனின்
கேடுநீங்க வேண்டாமா கூறு
உண்டி கொடுத்தும் உயிர்வாழ நன்றே
தொண்டு தனைசெய்தோன் துன்பமுற-விண்டாலும்
காணாதே கண்மூடி காண்பதுவோ! ஆள்வோரே
நாணாதோ நம்நாடும் நன்று
புலவர் சா இராமாநுசம்
சிறப்பான வெண்பாக்கள்! அருமையான கருத்து! நன்றி!
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteவந்தனை அய்யா! வயலில் உழைப்பாரை
ReplyDeleteநிந்தனை செய்வார் நிலைக்கின்றார் – இந்தியாவில்
புற்களையே நெல்லெனப் பொங்குகிறோம், சொல்கிறதே
தற்கொலைச் செய்திகளைத் தாள்?
அய்யா வெகுநாளாய் ஆர்த்தெழுதும் பாவகைநீர்
தொய்வின்றி யாப்பதில்நான் தோய்ந்துள்ளேன் – மெய்யாக
நண்பர் விஜூவாரின் நல்விளக்கம் கண்டுரைக்க
அன்போடு தந்தேன் அழைப்பு
இணைப்புக்குச் செல்ல –
திருச்சி திரு. ஜோசப் விஜூ அவர்களின் வெண்பாப் பயிற்சிப் பக்கம்- http://oomaikkanavugal.blogspot.com/2014/11/blog-post.html
http://oomaikkanavugal.blogspot.com/2014/11/ii.html
அதனைத் தொடர்ந்து கவிதைபற்றிய எனது இணைப்புகள் –
http://valarumkavithai.blogspot.com/2014/11/blog-post_4.html
http://valarumkavithai.blogspot.com/2014/11/blog-post_52.html
முத்திரைக் கவிதை
ReplyDeleteமீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
தொடர வாழ்த்துக்கள்
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteவெண்பாக்கள் நன்பாக்களாய் இருக்கிறது அய்யா
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteவெண்பாவும் கருத்தும் தங்கள் பட்டறிவைப் பறைசாற்றுவனவாக உள்ளன.
ReplyDeleteகவிதை என்ற இதழைத் தெசிணி என்பார் நடத்திக் கொண்டிருந்தார்.
மரபுக் கவிதைகளுக்கெனவே இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக வெளிவந்து கொண்டிருந்த சிற்றிதழ் அது.
1996 அலலது 1997 வாக்கில் தன் இறுதி மூச்சை விட்டது.
மிகப் பல சிரமங்களுக்கிடையே அவ்விதழை எப்படியும் நிறுத்தாது நடத்த வேண்டும் என்று முயன்ற அப்பெருமகனாரை தமிழகம் கைகழுவிவிட்டது.
இதை எல்லாம் இங்குச் சொல்லுவதன் காரணம் அவ்விதழின் தலைப்புக் கவிதைகள் எல்லாமே நாட்டுநடப்பை உலகப் போக்கை அப்பொழுதைய வரலாற்றைப் பதிவு செய்து அதைக் கவிஞனின் பார்வையில் விளக்குவதாக அமைத்திருப்பார்.
அது எனது மாணவப் பருவம்.
அதன் கடைசிச் சில இதழ்களின் நான் அப்பொழுது எழுதிய மரபுக்கவிதைகள் வெளிவந்தன.
இறுதி இதழில் நானெழுதிய வரிகள் சி ல நினைவுள்ளன,
“நல்லார் பலரை நசுக்கி அழித்தபின்
எல்லாப் புகழ்தரும் ஏழைத் தமிழகம்“
தங்களின் நடப்புச் சித்தரிப்பு மரபுப்படைப்புகளைக் காணும் போது அக்கவிதை இதழும் நான் கண்டிராத தெசிணியாரின் திருமுகமும் நினைவில் வந்து போகின்றன.
தங்களைத் தொடர்கிறேன்.
நன்றி.
த ம 2
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteஅருமை ஐயா
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteதம 3
ReplyDeleteமிக்க நன்றி!
Delete"இட்டபயிர் போயிற்றே! ஏர்பிடித்தோன் என்செய்வான்
ReplyDeleteதிட்டமென்ன ஆள்வோரே எண்ணுங்கள்" என
நன்றாக உரைத்தீர்...
சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்