ஏதேதோ நடக்குது
நாட்டுனிலே –முழுதும்
எழுதிட
முடியுமா பாட்டினிலே-நடக்கும்
தீதேதோ தெரியாது
வாழுகின்றோம்-போகும்
திசைகாணா துயர்தன்னில் வீழுகின்றோம்-மேலும்
போதாது விலைவாசி விண்ணைமுட்ட –தினம்
புலம்பிட
மக்களும் கண்கள்சொட்ட! –அதனை
ஒதாது இருந்திட இயலவில்லை-ஏதோ
உள்ளத்தை
வருத்திட வந்ததொல்லை
பகல்கொள்ளை படுகொலை
பெருகிப் போச்சே-நாளும்
பயத்துடன்
வாழ்கின்ற நிலையு மாச்சே!-வேறு,
புகலென்ன !
வழியின்றி! வருந்த லாச்சே-நாடும்
போவதென்ன
காடாக! மாற லாச்சே!-மேலும்
மழைவெள்ளம்!
இட்டபயிர் அழிந்து போக-கண்டே
மனம்குமுறும் விவசாயி நொந்து சாக!-நீதியில்,
பிழையன்றோ
? ஆள்வோரே எண்ணி பாரீர்- ஏழைப்
பேதையராம் அன்னவரை காக்க வாரீர்!
புலவர் சா இராமாநுசம்
அருமையான வரிகள்! எல்லோரது ஆதங்கத்தையும் அழகிய வரிகளாய் குவித்து விட்டீர் ஐயா!
ReplyDelete#காக்க வாரீர்!#
ReplyDeleteஎந்தக் காலத்தில் அய்யா வந்தார்கள் ?
த ம 2
நல்ல கவிதை ஐயா...
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஆள்வாரை ஆண்டவனாய்ப் போற்றினாலும் ஏழைக்குத்
ReplyDeleteதோள்கொடுக்கும் பாட்டோ துடிப்பு!
அருமையான பாடல் புலவர் ஐயா.
மிக்க நன்றி!
Deleteபயத்துடனே வாழும் நிலை தான் தொடர்கிறது. ஆதங்கம் வெளிப்பாட்டாக.
ReplyDeleteவணக்கம் ஐயா !
ReplyDeleteஇன்றெனது எண்ணத்தில் பொங்கிய அதே உணர்வு கண்டு உள்ளம் தங்களை வணங்குகிறது ! மிக்க நன்றி ஐயா அருமையான இப் பாவரிகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு .