வலைவழிப் பலரும் வந்தீர்கள் –என்னை
வாழ்த்தியே அன்பைத் தந்தீர்கள்
இலைநிகர் அதற்கென மகிழ்கின்றேன்-நாளும்
இருகரம் கூப்பித் தொழுகின்றேன்
அலைபடும் கடற்கரை மணலாக-எரியும்
அணல்தனை அணைக்கும் புனலாக
நிலையென உம்முடை வரவுகளே-தேயா
நிலவெனக் கண்டேன் உறவுகளே
அன்பினை அடக்கிட தாளில்லை-என்றே
ஐயன் சொன்னது தவறில்லை
என்பினை போர்த்திடும் தோலாக-உம்மோர்
இன்னுரை அனத்தும் பாலாக
என்னுயிர் வளர்த்திடும் எருவாக –நெஞ்சில்
எழுவன,கவிதைக் கருவாக
இன்பினை மேலும் தருவீரே –என்னுடை
இதயத்து நன்றி பெறுவீரே!
புலவர் சா இராமாநுசம்
நன்றிக் கவிதை படித்து மகிழ்ந்தேன்.
ReplyDeleteநன்றிக்கோர் நன்றி!
நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும் ஐய! தங்களைப் போன்ற அனுபவமிகு கவிஞர்களை இந்த வலையுலகம் எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு!!
ReplyDeleteதங்கள் படைப்புகள் மேலும் பெருக வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி ஐயா!
புலவர் அய்யா அவர்களுக்கு, எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteத.ம.2
மிக்க நன்றி!
DeleteThulasidharan V Thillaiakathu அவர்கள் "நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும் ஐய! தங்களைப் போன்ற அனுபவமிகு கவிஞர்களை இந்த வலையுலகம் எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு!!" எனச் சொல்லிய கருத்தையே நானும் விரும்பிப் பகிருகிறேன்.
ReplyDeleteதங்கள் பின்னூட்டங்களூடாக் கற்ற மாணவன் நான் என்பேன்.
மிக்க நன்றி ஐயா!
மிக்க நன்றி!
Deleteதங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பினை அடக்கிட தாளில்லை-என்றே
ReplyDeleteஐயன் சொன்னது தவறில்லை//
நன்றியை அழகு தமிழில் சொல்லி இன்னும் ஆனந்தப்பட வைத்து விட்டீர்கள்.
நன்றி சொல்லிய கவிதையும் மிக அருமை ஐயா....
ReplyDeleteத.ம. +1