Monday, October 13, 2014

முகநூலில் வந்தவை!





இனிய உறவுகளே!

நாம் சில நேரங்களில் பிறருக்கு நல்லது செய்வதாக எண்ணிக் கொண்டு செய்யும் செயல்களே அவர்களுக்கு கெடுதலாக அமைந்து விடும்! அதாவது யாருக்காக, எதற்காக நாம் செய்கிறோமோ அச் செயலின் பண்புநலன்களை(விளைவினை) எண்ணி ஆய்வு செய்யாமல்
செய்தால்! வரும் என்பது வள்ளுவர் கருத்து!

நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை- குறள்

மனித வாழ்க்கையில் கெடுதல் , என்பது நமக்கு வருவதும் அதனால்
துன்பம் கொள்வதும் , இயல்பே! அதனைத் தடுக்கத்தானே நாம் முயல்வோம்! எதனால் கெடுதல் வந்தது என, நாம் ஆய்வதற்கு முன்
வள்ளுவர் சொல்வதைக கேட்போமா!
கெடுதல் , நாம் செய்யத் தகாத செயல்களைச் செய்வதனாலும்
வரும், உரிய நேரத்தில் செய்ய வேண்டிய செயல்களை ,நாம் செய்யத்
தவறினாலும் வரும் என்பதே அவர் கருத்து

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும் 
.
 நாம் சிலநேரங்களில் சிலர் செய்யும் செயலைப் பார்த்து இவை , அறிவுள்ளவன் செய்யும் செயலாக இல்லையே என்று அலுத்துக் கொள்வதுண்டு! அதுபோல வள்ளுவரும் நாகரீகமாக தம் கருத்தை வெளிப்படுத்துகிறார்!
அதாவது, பிற, உயிர்களின் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதி உதவ முன் வராவிட்டால் அறிவிருந்தும் பயனில்லை என்பதாம்!
 
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை.- குறள்

பிறந்தவன் ஒரு நாள் இறப்பது உறுதி ! அதுதான் இயற்கை! இதில்
மாற்றமில்லை! அதுபோல், இறந்தவன் மீண்டும் எழுவதில்லை என்பதும் உண்மை தானே !இதனை அறிந்தவர்தானே நாமெல்லாம்!
ஆனால் இரண்டுக்கும் இடைப்பட்டக் காலத்தில் வாழ்ந்து மடிகின்ற
நமக்குள், எத்தனை பேதங்கள்! சண்டைகள் ! வேறுபாடுகள் ! போன்ற
பலவும், வருதால் கண்ட பலன் என்ன! யாரேனும் பதில் சொல்ல இயலுமா!

உறங்கியவன் , விழித்தெழுவது எவ்வளவு இயற்கையானதோ,அதுபோல வாழ்கையில் விழுந்தவனும் (நினைத்து) தானும் எழ வேண்டும்! முயல வேண்டும் ! வெற்றி உறுதி!

புலவர்  சா  இராமாநுசம்

9 comments :

  1. வணக்கம்
    ஐயா.

    வள்ளுவர் பாடலுடன் அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் யாவரும்அறிய வேண்டிய விடயம் பகிர்வுக்கு நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. குறளமுதம் பருகினேன் மிகவும் இனிமை அய்யா !
    த ம 2

    ReplyDelete
  3. விழுந்தவன் எழுந்தால், முயன்றால் வெற்றி உறுதி
    அருமை ஐயா நன்றி

    ReplyDelete
  4. நாம் சில நேரங்களில் பிறருக்கு நல்லது செய்வதாக எண்ணிக் கொண்டு செய்யும் செயல்களே அவர்களுக்கு கெடுதலாக அமைந்து விடும்! அதாவது யாருக்காக, எதற்காக நாம் செய்கிறோமோ அச் செயலின் பண்புநலன்களை(விளைவினை) எண்ணி ஆய்வு செய்யாமல்
    செய்தால்! வரும் என்பது வள்ளுவர் கருத்து!யய

    மிக நல்ல கருத்து ஐயா! மற்றவையும் அருமை ஐயா!

    ReplyDelete
  5. பிறந்தவன் ஒரு நாள் இறப்பது உறுதி ! அதுதான் இயற்கை! இதில்
    மாற்றமில்லை! அதுபோல், இறந்தவன் மீண்டும் எழுவதில்லை என்பதும் உண்மை தானே !இதனை அறிந்தவர்தானே நாமெல்லாம்!
    ஆனால் இரண்டுக்கும் இடைப்பட்டக் காலத்தில் வாழ்ந்து மடிகின்ற
    நமக்குள், எத்தனை பேதங்கள்! சண்டைகள் ! வேறுபாடுகள் !// உண்மைதான் அய்யா..

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...