Tuesday, September 9, 2014

தேக்கம் இன்றி கவிதைகளைத் தெளிவாய் நானும் எழுதிடவே!



முன்னுரை

கண்ணாய் விளங்கும் நண்பர்களை
கவிதை நடையில் எழுதுமென
அண்ணா என்றே ஆணையிட்ட
அன்பு சோதரி இராஜேஷ்வரிக்கு
நன்றி நன்றி நன்றி


நண்பர்கள் பட்டியல் பெரிதாமே
நவிலுதல் எனக்கே அரிதாமே
பண்பொடு பழகினர் அவர்தாமே
பலரை விட்டால் தவறாமே

ஆனால் சொல்ல ஆகாதே
அதனால் அவர்மனம் நோகாதோ
நானாய் எடுத்த முடிவொன்றே
நன்கே ஆய்ந்து சரியென்றே

பள்ளி தொட்டு இன்றுவரை
பாசம் காட்டி பழகியுரை
அள்ளிக் கொட்ட அன்பாலே
அணைத்தான் அவனே பண்பாலே

சொல்லப் பெருமிதம் கொள்கின்றேன்
சொல்லின் அவன்பெயர் சதாசிவம்
எள்ளுள் இருக்கும் எண்ணையென
என்னுள் அவனது அன்பேசிவம்
இன்று
கருத்தை அச்சில் தட்டுகிறேன்
கவிதையாய் வலையில் தீட்டுகிறேன்
திருத்த வேண்டின் திருத்துகிறேன்
தினமும் வலையில் பொருத்துகிறேன்
அன்று
எழுதி அடித்து எழுதிடுவேன்
எடுத்து அதனை படித்திடுவான்
பழுதே இன்றி படியெடுத்து
படிக்க என்னிடம் கொடுத்திடுவான்
அவனே
என்றும் எந்தன் உயிர்நண்பன்
எழுமை பிறப்பிலும் தொடர்நண்பன்
நன்றி மறவேன் என்நண்பா
நலமுற வாழ வாழ்த்துப்பா

தேக்கம் இன்றி கவிதைகளைத்
தெளிவாய் நானும் எழுதிடவே
ஊக்கம் தந்தது அவனன்றோ
உரமாய் இருந்தது அவனன்றோ

புலவர் சா இராமாநுசம்   ( மீள்பதிவு)

21 comments :

  1. நண்பருக்கு நன்றி நவிலலா? அருமை.

    ReplyDelete
  2. கண்ணான கவிதை வரிகள்
    களிப்பு தருகின்றன..பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. அழகான வரிகளில் நண்பருக்கு ஒரு கவிதை! அருமை ஐயா!

    ReplyDelete
  4. இப்படி ஒரு கவிதையை படித்து எவ்வளவு நாட்களாயிற்று என்று நினைக்கும் வகையில் ஒரு நன்றி மிக்க கவிதை..

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா நலமாக இருக்கிறீர்களா... வேலைப் பழு காரணமாக இப்போது வலைத்தளப்பக்கம் எட்டிப் பார்ப்பதே குறைந்து விட்டது

    ReplyDelete
  6. இப்படி நண்பர் கிடைக்க நீங்கள் கொடுத்துத்தான் (எவ்வளவு ,யாரிடம் என்று கேட்காதீர்கள் ) வைத்திருக்க வேண்டும் !
    த ம 4

    ReplyDelete
  7. நண்பர் கதை கூறும்
    சிறந்த பா வரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
  8. நட்பின் பெருந்தக்க யாவுள
    அருமை ஐயா
    நன்றி

    ReplyDelete
  9. உங்கள் நட்பின் பெருமை சொல்லும் கவிதை.....

    அருமை புலவர் ஐயா.

    ReplyDelete
  10. நன்றி மறக்காத நல்லோரின் நினைவு கவிதை அருமை

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...