வம்புதர பாகிஸ்தான் மேலும் ஒன்றே –சீனா
வருகிறது துணைபோல நினைக்க இன்றே-எனவே
தும்புவுட்டு வால்பிடிக்க முயல வேண்டாம்-இதுவே
தொடர்கதையாய் ஆகிவிடின் துயரே ஈண்டாம்!-வீணில்
அம்புதனை நோவதிலே பயனே இல்லை-மத்தியில்
ஆள்வோரே! ஆய்வீரே! இதற்கோர் எல்லை!- ஆக
தெம்புடனே கட்சிகளை திரட்டி உடனே –ஏற்ற
தெளிவுடனே முடிவெடுத்தல் உமது கடனே!
புலவர் சா இராமாநுசம்
வணக்கம் ஐயா !
ReplyDeleteமிகவும் சரியான முடிவு ! கொள்ளைக்காரர்கள் தம் சுயரூபத்தை
வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள் மறைவில் இருந்து
திட்டங்களை வகுத்துக் கொடுக்கும் இவர்களைத் தான் முறையே
கண்டு வேரறுக்க வேண்டும் ! பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .
மிக்க நன்றி!
Deleteஅடிக்கடி சீன ராணுவம் அத்துமீறி நுழைகிறது என்று செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன .முளையிலேயே கில்லி எறிவதுதான் நல்லது !
ReplyDeleteத ம 2
மிக்க நன்றி!
Deleteஎல்லைகளில் பதட்டம் கொடுக்கும்
ReplyDeleteநாடுகளின் செயல்பாடுகளை முளையிலேயே
கிள்ளி எறிவது அவசியம்...
சரியான வரைமுறைகளுடன் பேச்சுவார்த்தை
நடத்துவது அவசியம்...
நல்ல கவிதை பெருந்தகையே...
மிக்க நன்றி!
Deleteநல்ல யோசனை ஐயா.
ReplyDelete