எழுத்ததை அறிவிப்பான் இறைவனாம் என்றே-என
எண்ணியே ஆசிரியர் பணிசெய்ய நன்றே
அழுத்தமாய் பசுமரத் தாணியைப் போன்றே-நீர்
ஆற்றிட வந்தீராம் சேவையாம் இன்றே
செழித்திட உலகது வேண்டுதல் நன்றே-என்
சிரம்தாழக் கரம்கூப்பி செப்புதல் ஒன்றே
அழியாது இயற்கையைக் காப்பீரா மென்றே-வகுப்பு
அறைதனில் மாணவர் முன்னாலே நின்றே
பருவங்கள் மாறிட உலகமே மாறும்-இதை
படிக்கின்ற மாணவர் உணரவே கூறும்
வருங்கால உலகமே அன்னாரின் கையில்-அதை
வகுப்பது வகுப்பறை அறிவீரா பொய்யில்
தருகின்ற அழிவிற்கு ஜப்பானே சாட்சி-முன்னர்
தமிழ்நாடு கண்டதும் அழியாத காட்சி
திருமிகு இப்பணி செய்திடின் நீரும்-நல்ல
திருப்பணி யாகவே மலர்ந்திடும் பாரும்
பலவாறு பருவங்கள் மாறிட யிங்கே-தினம்
பார்கின்றோம் யார்செய்த தவறுதான் எங்கே
நிலமகள் நடுங்கியே குலுங்கிட அந்தோ-தம்
நெடும்வாயே திறந்துயிர் விழுங்கிட தந்தோம்
அலையாக பேராழி புகுந்திட உள்ளே-உலகு
அழிகின்ற காட்சிகள் திரையது சொல்ல
விலையாக அழிப்பதோ நாள்தோறும் தன்னை-மேலும்
விடுவாளா எண்ணுங்கள் இயற்கையாம் அன்னை
சுற்றும் சூழலும் கெட்டேதான் போச்சே-தினம்
சுற்றிடும் உலகெங்கும் மாசாக ஆச்சே
கற்றும் பாடமே தெளியவே இல்லை-என்ன
காரணம் யாருக்கும் புரியவே இல்லை
பெற்றவள் இயற்கையாம் அன்னையைக் காத்தே-நாம்-
பேணுவோம் உலகென்னும் நம்பெரும் சொத்தே
மற்றெவர் போனாலும் மாணவர் சேவை–உலக
மக்களின் வாழ்வுக்குச் செய்திடும் சேவை
புலவர் சா இராமாநுசம்
மீள்பதிவு-(2011)
ஆண்டுகள் பல போனாலும் என்றும் பொருந்தும் அருமைக் கவிதை !
ReplyDeleteத ம 1
ஆசிரியப் பணியில் இருந்து நீங்கள் ஓய்வு பெற்று விட்டாலும் இன்றும் என்றும் நீங்கள் ஒரு ஆசிரியரே! புலவர் அய்யாவுக்கு எனது உளங்கனிந்த ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteத.ம.2
ஆசிரியர் தின வாழ்த்துகள்
ReplyDeleteகற்றும் பாடமே தெளியவே இல்லை-என்ன
ReplyDeleteகாரணம் யாருக்கும் புரியவே இல்லை//உண்மைதான் அய்யா
அருமையான பகிர்வு
ReplyDeleteதொடருங்கள்
ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteஆசிரியர் தின நல்வாழ்த்துகள் புலவர் ஐயா.
ReplyDelete