Thursday, September 4, 2014

போகப் போகத் தெரியும் –மரைப் பூவின் வாசம் புரியும்


போகப் போகத் தெரியும் –மரைப்
பூவின் வாசம் புரியும்
ஏகம் இந்தியா என்றே- நிலை,
இருக்குமா ! இல்லையா !நன்றே!
சோகம் தீரும் என்றார்!-உறுதி
சொல்லி அவரும் நின்றார்!
தாகம் தீர வில்லை-மேலும்
தருவ தென்னவோ தெல்லை!

பானை சோறு பதமே- நாம்
பார்கு மந்த விதமே
ஆன தய்ய நன்றே!-நடக்கும்
ஆட்சி முறையும் இன்றே!
போன ஆட்சி போன்றே-நீரும்
போவ தேனோ இன்றே
கானல் நீரா ஐய்யா-மக்கள்
கண்ட கனவு பொய்யா

எதிலும் தெளிவே காணோம்!-விலை
ஏற்றம் உயர்வே! நாணோம்!
பதிலும் முறையாய் இல்லை-போகும்
பாதை நீங்கத் தொல்லை!
மதில்மேல் பூனை ஆக- மக்கள்
மனமே மயங்கிப் போக,
விதியே இதுதான் போலும்-என்ற
வேதனை நாளும் மூளும்!

புலவர் சா இராமாநுசம்

8 comments :

  1. // பூணை//

    குறைகள் சீக்கிரம் மாறட்டும்/மறையட்டும்.. ஆட்சி மாறியது போன்றே காட்சிகளும் மாறட்டும். :)))

    ReplyDelete
    Replies
    1. நன்றி! குறை நீக்கப்பட்டது!

      Delete
  2. மேடையேறி பேசும்போது ஆறுபோல பேச்சு மேடை இறங்கி வந்த பேசினதெல்லாம் போச்சு என்பதைப் போல .ஆட்சி ஏறும் வரை நமக்கு இருந்த நம்பிக்கையை ஆட்சிக்கு வந்த பின் சீர்குலைத்து விட்டார்கள் !
    த ம் 2

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா

    காலதேவன் காலத்துக்கு ஏற்ப வழிவகை செய்வான் அருமையாக சொல்லியுள்ளீர்கள்
    த.ம3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. சோகம் தீரும் என்றார்!-உறுதி
    சொல்லி அவரும் நின்றார்!
    தாகம் தீர வில்லை-மேலும்
    தருவ தென்னவோ தெல்லை!---உண்மை

    ReplyDelete
  5. அருமையான பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  6. அருமை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...