Thursday, September 18, 2014

கத்தும் கடலலையாய்- ஓயா கரைமோதும் சிற்றலையாய்



கத்தும் கடலலையாய்- ஓயா
கரைமோதும் சிற்றலையாய்
தத்தும் குழந்தையென- வானில்
தவழ்கின்ற மேகமென
நித்தம் ஒருகவிதை-என்றும்
நிலையாக எழுதிவிட
சித்தம் இருந்தாலும் –முதுமை
செயல்படுத்த விடவில்லை


புலவர் சா இராமாநுசம்

10 comments:

  1. இதுவரை எழுதியவையே உங்கள் பெயரை என்றும் சொல்லும் ,இனிமேலும் வருத்திக் கொள்ள வேண்டாம் ,உடல் நலத்தைப் பேணுங்கள் !சிறியேன் சொன்னது தவறு என்றால் மன்னியுங்கள் அய்யா !
    த ம 1

    ReplyDelete
  2. கவிஞனால் ஓய்வு பெற முடியுமா....?

    என் ஆசிரியர் கவிஞர் கி. பாரதிதாசனின் ஆசிரியர், பாவேந்தர் பாரதிதாசனின் நேரடி மாணவர் திரு. சித்தன் ஐயாவிற்கு இப்போது 96 வயது நடக்கிறது. அவர் இன்றளவும் ஒரு நாளைக்கு ஒரு கவிதை எழுதிக்கொண்டு தான் இருக்கிறார்.

    நீங்கள் அன்றாடம் பெரிய பெரிய பாடல்கள் எழுத முடியவில்லை என்றாலும் சிறு பாடலைப் படையுங்கள்.
    தொடர்ந்து எழுதுங்கள் புலவர் ஐயா.

    ReplyDelete
  3. நித்தம் இல்லை என்றாலும் தோன்றும் போது எழுதுங்கள் ஐயா...
    உங்கள் கவிதைகள் எல்லமே முத்துக்கள்தான்.

    ReplyDelete
  4. தொடர்ந்தும் எழுத
    உடல்நலம் வேண்டி
    இறைவனை வேண்டுகிறேன்,

    ReplyDelete
  5. சங்கத் தமிழ் பாடும் கவியே..
    எம் நெஞ்சத்தில் குடியிருக்கும் புவியே..
    நீவீர் சொல்லொன்று சொன்னாலும்
    அது கவிதை ஐயா..
    உடல் நலம் பேணுங்கள்...
    எம் போன்றோருக்கு நீங்கள்
    மாபெரும் சொத்து...

    ReplyDelete
  6. முடிந்த போது எழுதுங்கள் ஐயா.

    ReplyDelete
  7. தங்களைப் பார்த்து வியக்கிறேன் அய்யா. தாங்கள் இன்னும் எழுத இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete