Friday, September 19, 2014

இந்தியா என்பதோர் நாடே-என்ற எண்ணத்தில் வந்ததிக் கேடே!



உறவுகளே! இந்தித் திணிப்பு! எதிர்ப்பு! திரும்பப் பெறுதல்! செய்தி!இன்று!
எனக்குப் பழைய நினைவுகள்!

அன்று, நான் எழுதியது, இதோ !
அறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பட்டு அவர் நடத்திய
திராவிட நாடு இதழின் முதல் பக்கத்தில் வெளிவந்த கவிதை! இது, இரண்டாம் முறை இந்தி நுழைய முயன்ற போது
எழுதியது! ஏறத்தாழ, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்!


இந்தியா என்பதோர் நாடே-என்ற
எண்ணத்தில் வந்ததிக் கேடே
நந்தமிழ் எழில்மிகு வீடே-இந்தி
நலம்தரா மாகள்ளிக் காடே
வந்தது இன்றெனில் ஓடே-இந்தி
வருகின்ற வழியெலாம் மூடே
பந்தென அதையெண்ணி ஆடே-இந்தி
பறந்திட வடக்கினைச் சாடே!


பள்ளியில் கட்டாயம் வேண்டும்-என்ற
பல்லவி கேட்குது மீண்டும்
துள்ளி எழுந்துமே ஈண்டும்-இந்தி
தொலைந்திட செய்வோமே யாண்டும்
கொள்ளியை எடுத்தெவர் உலையில்-அதை
கொண்டுமே வைப்பாரா தலையில்
எள்ளியே நகைக்காதோ நாடே-இந்தி
ஏற்பது தமிழுக்குக் கேடே!

தாண்டவ மாடுது இந்தி-அஞ்சல்
தலைகளில் சொகுசாகக் குந்தி
வேண்டாதப் பொதுமொழி இந்தி-அதை
விரட்டுவோம் அனைவரும் முந்தி
ஈண்டெவர் மரித்திட வரினும்-அதை
எத்தனை வகைகளில் தரினும்
மாண்டவர் பிழைத்திடப் போமோ-இந்தி
மறுமுறை நூழைந்திட ஆமோ!?

புலவர் சா இராமாநுசம்

11 comments :

  1. வணக்கம்
    ஐயா
    காலம் உணர்ந்து கவிதை மலர்ந்து.
    காலம் பதில் சொல்லும்... மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  2. இடித்து உரைத்த நற் கருத்து !வணங்குகின்றேன் ஐயா !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  3. திரும்பவும் ஹிந்தி திணிப்பா.....

    நாம் “இந்தி“யனா? “தமிழ“னா? ஒரே குழப்பம் ஐயா.

    பாடல் அருமை புலவர் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  4. இந்தியாவை ஐம்பதாண்டு பின்னோக்கி தள்ளும் ஹிந்தி திணிப்பை எதிர்க்க வேண்டியது அவசியக் கடமை மட்டுமல்ல ,அவசரக் கடமையும் கூட !
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  5. அருமையான கவிதை புலவர் ஐயா.

    ReplyDelete
  6. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...