Saturday, September 13, 2014

இறவாது இன்றென்னை காப்போர் தாமே- வலை இணையதள உறவுகள்! உண்மை! ஆமே!


மறவாமல் நாள்தோறும் தொழுவோன் உன்னை –ஏழு
மலைவாச காப்பவன் நீதான் என்னை
உறவானார் எல்லோரும் ஒதுங்கிக் கொண்டார் –வரின்
உதவிட வேண்டுமே! அச்சம் கண்டார்
இறவாது இன்றென்னை காப்போர் தாமே- வலை
இணையதள உறவுகள்! உண்மை! ஆமே!
பிறவாத உடன்பிறப்பே ! அவர்கள் இன்றும் – வந்து
பேசுகின்றார் !என்னோடே வாழ்க என்றும்!

புலவர் சா இராமாநுசம்

17 comments:

  1. உங்கள் உற்சாக வாழ்வின் ரகசியம் புரிந்தது !
    த ம 2

    ReplyDelete
  2. நெடுதுயர்ந்த ஆலமரத்தின் நிழலில்
    சிறுபறவைகள் ஒண்டி மகிழ்வு கொள்வது இயல்புதானே ?

    ReplyDelete
  3. மகிழ்வோடு என்றும் நாங்கள் துணையாய்
    மறுபடியும் அன்புடனே உறவாய் இருப்போம்
    இதுதானே எப்போதும் உங்கள் விருப்பம்
    இணையதார் உம்மோடு இருப்போம்

    ReplyDelete
  4. எதையும் எதிர்பார்க்காத உண்மையான அன்பிற்கு
    நீங்கள் அளித்த பாடல் மிக அருமை புலவர் ஐயா.

    ReplyDelete
  5. வலைத் தள உறவுகளை புகழ்ந்தது சிறப்பு! இது உண்மையும் கூட! வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  6. உண்மை தான் ஐயா இந்த உணர்வே தான் எங்கள் உள்ளத்திலும் ஓடுகின்றது !வலைத் தளம் தந்த அன்பு தெய்வம் தாங்கள் எங்கிருந்தாலும் மகிழ்வு அங்கே நிலைத்திக்க வேண்டுகிறேன் !

    ReplyDelete
  7. வலையால் இணைந்தோம்.....

    சிறப்பான பா வரிகள்....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  8. சிறப்பான கவி...
    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  9. இனிய வணக்கம் பெருந்தகையே...
    உங்களின் முகமும்... வரிகளுமே
    எங்களைப் போன்றோருக்கு உற்சாகம்
    கொடுக்கவல்ல அருமருந்து...
    இனிய கவிதை படைத்தீர்கள் ஐயா..

    ReplyDelete
  10. தமிழ்நண்பர்கள்.கொம், வலைப்பூ வழியே நட்பைத் தொடர்கிறேன்; தொடர்வோம்.

    ReplyDelete