கொலைகொள்ளை நடக்காத நாளே இல்லை –இந்த
கொடுமைக்கு, விடிவுவர உண்டா எல்லை!
கலையெனவே கொலைகூட ஆயிற் றிங்கே –கயவர்
கைக்கூலி, பெறுகின்றார் கருணை எங்கே!?
நிலைகுலைந்து வாழ்கின்றார் மக்கள் நாளும்-சற்றும்
நிம்மதியே இல்லாமல் அச்சம் மூளும்
வலைவீசி தேடுவதாய் காவல் துறையும் –செய்தி
வருகிறது! என்னபயன்! எப்படிக் குறையும்!?
பொதுமக்கள் ! நமக்குமிதில் பொறுப்பு வேண்டும்-வீட்டைப்
பூட்டிவிட்டால் , போதாது காக்க ஈண்டும்!
எதுவீட்டில் வைப்பதென எண்ண வேண்டும்-அதற்கு
ஏற்றவழி என்னவெனக் ஆய்வீர் யாண்டும்!
முதுமக்கள் தனித்திருப்பின் , காவல் துறைக்கே-நாமே
முறையாக தெரிவிப்போம்! குற்றம் தவிர்க்க!
இதுபோல ,மேலும்சில நாமும் செய்வோம் –ஏதோ
இயன்றவரை நமைக்காக்க முயலின்! உய்வோம்!
புலவர் சா இராமாநுசம்
முதுமக்கள் தனித்திருப்பின் , காவல் துறைக்கே-நாமே
ReplyDeleteமுறையாக தெரிவிப்போம்! குற்றம் தவிர்க்க////
அவசியமான அறிவுரை எல்லோருக்கும் பொருந்தும்
நன்றி!
Deleteஉங்களின் ஆலோசனைகளை கடைபிடித்தால் தப்பிக்கலாம் அய்யா !
ReplyDeleteத ம 2
சிறந்த ஆலோசனை ஐயா
ReplyDeleteதம 3
ReplyDeleteநன்றி!
Deleteநல்ல ஆலோசனை ஐயா.
ReplyDeleteநன்றி
Deleteஅருமையான அறிவுரை! நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ளவிடில் காவல் துறையால் ஒன்றுமே செய்யமுடியாது!
ReplyDelete