Tuesday, September 2, 2014

இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே!



இனிய உறவுகளே !

இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும்
இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே!
நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே ! –இவன்
நான்பெற்ற இளையமகள் பெற்ற சேயே!
அன்றெந்தன், துணைவியவள் விட்டுச் சென்றாள்-பெற்ற
அன்னையென அன்புதர மகளே ! நின்றாள்
ஒன்றென்ன பெற்றமகன் வாழ்க என்றே- வலை
உறவுகளே! வாழ்த்துங்கள்! இவனை நன்றே

உலகத்தில் ,உத்தமனாய் அவன்வாழ வேண்டும்! –கண்டே,
உள்ளத்தில் உவகைமிக உருவாக யாண்டும்!
திலகமென , படிப்போடு , பண்பாடும் கற்றே-பலரும்
தெரிவிக்கும் பாராட்டே, பட்டமென பெற்றே,
அன்புமிக அடக்கமொடு வளர்ந்திடவே, வாழ்த்தி!-வலை
அன்பர்களே! கரம்கூப்பி சிரம்தன்னைத் தாழ்த்தி
இன்புமிக உறவுகளே! நான்வேண்டு கின்றேன்!-என்றும்
இதயத்தில் வாழ்வோரே உமைத்தூண்டு கின்றேன்!

நன்றி! வணக்கம்!

புலவர் சா இராமாநுசம்

31 comments:

  1. பேரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.

    பாரில் அவதரித்த மைந்தனது
    பார் போற்றும் அவனியிலே.
    பேரன் புகழ் சிறக்க
    இறைவனை வணங்குகிறேன் ஐாயா

    பேரனுக்கு புகழ்பாடிய பாவினை கண்டு மகிழ்ந்தேன்.
    இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் பேரனுக்கு
    த.ம 1வது வாக்கு

    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...:

    வலையுலக உறவுகள் கேட்டதிற்கு ஏற்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்பதை  மிக்க மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. பண்புடனே வாழ்ந்திடவும்
    பலகலையும் கற்றிடவும்
    இன்பம் எல்லாம் பெற்றோங்க
    இனிதாய் வாழ்த்துகிறேன் இன்நாளில் ....!

    ReplyDelete
  4. உங்களின் அன்புப் பேரனுக்கு எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அன்புப் பேரனுக்கு உளமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete

  7. வணக்கம்!

    எங்கள் பெரும்புலவர் ஏத்திமகிழ் பேரனைத்
    தங்கத் தமிழால்தா லாட்டினேன்! - பொங்குமுயர்
    அன்புறுக! ஆய்ந்தே அறிவுறுக! நற்குறளால்
    இன்புறுக பல்லாண்டு இருந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  8. தங்களின் பேரன் நீடூழி வாழ இறையருள் கிடைக்கட்டும் ஐயா.

    ReplyDelete
  9. என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா !தங்களின் செல்லப் பேரன்
    இறைவனின் அருளால் எல்லா நலனும் வளமும் பெற்று நீடுழி வாழ
    வாழ்த்துகின்றேன் .

    ReplyDelete
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. தங்கள் பேரனுக்கு
    எங்கள்
    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. தங்கள் பேரனுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் செல்லப்பையா :-)

    ReplyDelete
  15. அன்றெந்தன், துணைவியவள் விட்டுச் சென்றாள்-பெற்ற
    அன்னையென அன்புதர மகளே ! நின்றாள்
    ஒன்றென்ன பெற்றமகன் வாழ்க//
    வளமுடன் வாழ்க பல்லாண்டு

    ReplyDelete