Tuesday, August 26, 2014

முன்னர் முகநூலில் மொழிந்தவை!





உறவுகளே! வணக்கம்!
இன்று , தந்தையர் தினமாம்! பலரும் எழுதுகின்றார்கள் !
பெற்றவள் தாய் என்றால் , பெற்றவன் தந்தைதானே! அவர்கள்
பெற்றது( மகனோ,மகளோ ) யாரானாலும், அது உண்மைதானே!
எனவே ,அவர்களைப் வாழ்த்துவதோ , நன்றி சொல்லுவதோ
முறைதானே!
இங்கே , வள்ளுவர் கூட தந்தையர் தினம் பற்றி சொல்லியுள்ளதைப் பார்போமா!!!
தந்தைக்குத் தள்ளாமைத் தோன்றும் போது , கனோ, மகளோ
தாங்கிப்பிடித்து உதவேண்டுமென்று சொல்லாமல், இத், தந்தை, இப்படிப்பட்ட மக்களைப் பொறுவதற்கு என்ன தவம் செய்தானோ என்று , மற்றவர்(உலகத்தவர்) பேசும் படியாக இருத்தல் வேண்டும்
என்பதை, கடமை என்று கூட சொல்லாமல், உதவி என்றே சொல்லியுள்ளது வியக்கத் தக்கதல்லவா!

மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லென்னும் சொல்- குறள்

சொல்லுகின்ற பொருள் ,நல்லதோ, கெட்டதோ ,எதுவானாலும், அதனைச் சொல்லுகின்றவர் , உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ ,எவரானாலும்,நாம், அப்பொருளைப் பற்றி ஆராய்ந்து, அதன் உண்மைப் பொருளை உணர்வதுதான் அறிவாகும்!!

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவுகுறள்

எந்த ஒரு செயலையும் செய்ய முற்படும்போது அதனைப் பற்றி நன்கு ஆராய்ந்து.தகுதியான ஒருவனிடம் ஒப்படைக்க , வேண்டும்
அதாவது, இந்த, செயலை ,இப்படிப் பட்ட வழிகளின் மூலமாக,
இவன், செய்து முடிக்க வல்லவன் என ஆய்ந்து,அறிந்து அச்செயலை
அவனிடத்தில் விட வேண்டும்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்- குறள்

உறவுகளே!
உலகில் பொருள்!(காசு)இல்லாமல் எவரும் வாழ முடியாது என்பது, அனைவரும் அறிந்ததே! அதனால் அனைவரும் வாழ்வு வளம்காண அதனைத் தேடத்தான் வேண்டும்! சிலரை, ஓடிஓடி சம்பாதிக்கிறான் என்றுகூட சொல்வதுண்டு!
ஆனால், அச்செல்வத்தை நீங்கள தேடவேண்டிய அவசிமில்லை! அந்த செல்வமே நீங்கள் இருக்கும் இடத்தின் வழியைக் கேட்டு தானே வரும்! எப்பொழுது தெரியுமா! நீங்கள செய்யும் எந்த தொழிலையும் சோம்பலின்றி , ஊக்கத்தோடு உழைத்தால் போதும் என்பதாம்.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை . (குறள்)
அதர்--வழி, உழை--இடம்

புலவர்  சா  இராமாநுசம்



11 comments:

  1. வணக்கம்
    ஐயா.
    சிறப்பான அறை கூவல் கருத்து மிக்க வரிகள் படிப்பவர்களை மிக கவரும் வகையில்சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சிறப்பான படைப்பு ! உங்களுக்கும் என் இனிய தந்தையர் தின
    வாழ்த்துக்கள் ஐயனே !

    ReplyDelete
  3. நன்கு ஆராய்ந்து.தகுதியான ஒருவனிடம் ஒப்படைக்க , வேண்டும்// உண்மைதான் அய்யா

    ReplyDelete
  4. எளிமையாய் புரியும் படி குறள் விளக்கம் தந்து உள்ளீர்கள் ,மிக்க நன்றி அய்யா !
    த ம 5

    ReplyDelete
  5. சிறப்பான பகிர்வு ஐயா... அருமை.

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு. அழகான எளிமையான குறல் விளக்கங்கள். தந்தையர் தின வாழ்த்துக்கள் ஐயா!

    அந்த செல்வமே நீங்கள் இருக்கும் இடத்தின் வழியைக் கேட்டு தானே வரும்! எப்பொழுது தெரியுமா! நீங்கள செய்யும் எந்த தொழிலையும் சோம்பலின்றி , ஊக்கத்தோடு உழைத்தால் போதும் என்பதாம்.// உண்மையே!

    ReplyDelete
  7. பெரும்பாலோர் தாயும் தந்தையும் அவர்களைப் பிரிந்தபின் தான் இந்த நாட்களின் மூலம் நினைவு கூருகின்றனரோ

    ReplyDelete