Friday, August 22, 2014

விண்முட்டும் பலமாடி அடுக்கே எங்கும்-நீண்ட வீதிகளின் இருமருங்கும் பெலிவாய் ஓங்கும்


குப்பையிலா நகரமது சிங்கை என்றே-முன்னர்
கூறுவதைக் நாம்மவரும் கேட்டோம் நன்றே
செப்பறிய அந்நிலையே சீனா எங்கும்-நான்
சென்றபோது கண்டேனே! மகிழ்ச்சி பொங்கும்
தப்பியொரு இடத்தினிலும் குப்பை யில்லை-அவர்
தனிமனித ஒழுக்கத்தில் கண்டார் எல்லை
தொப்பையிலா மக்கள்தான் அங்கே முற்றும் -காண
தோன்றுகின்றார் !கட்டான உடலைப் பெற்றும்

விண்முட்டும் பலமாடி அடுக்கே எங்கும்-நீண்ட
வீதிகளின் இருமருங்கும் பெலிவாய் ஓங்கும்
கண்முட்ட தேடினாலும் குடிசை ஒன்றும்-அங்கே
காணவில்லை! உண்மையிது! வாழ்க!! என்றும்
பண்பட்ட அவர்வாழ்வில் பகட்டு யில்லை- ஏழை
பணகாரப் பாகுபாடு பேதம் இல்லை
வெண்பட்டு மென்மையென சாலை விரியும் –மின்
விளக்குகளோ தங்கமென ஒளியில் எரியும்

புலவர் சா இராமாநுசம்

15 comments :

  1. நல்விழிப்புக் கவிதை.

    "தப்பியொரு இடத்தினிலும் குப்பை யில்லை" நமது நாடுகளும் கைக்கொண்டால் நோய்கள் அற்றுப்போகுமே.

    ReplyDelete
  2. அந்த அற்புத சீனா கண்ணில் தெரிகிறது ,உங்கள் கவிதை வழியாய் !
    த ம +1

    ReplyDelete
  3. குப்பை மட்டுமல்ல
    தொப்பையும் இல்லை
    ஆச்சரியமாக இருக்கிறது ஐயா

    ReplyDelete

  4. வணக்கம்!

    சுற்றுலா தந்த சுகத்தை அளித்துள்ளீர்
    பற்றுடன் மின்னும் பதிவு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  5. சிங்கப்பூர் பற்றிய கவிதை வர்ணனை அற்புதம் தொடரட்டும் தங்கள் கவி மழை

    ReplyDelete
  6. கவிதையில் சுகாதார விழிப்புணர்வு(ம்) தெரிகிறது ஐயா.

    ReplyDelete
  7. சுத்தம் பற்றிய கவிதை அருமை ஐயா! நமது நாடு நம் அண்டை நாடாகிய, மக்கள்பெருக்கம் கொண்ட நாடாக இருந்தாலும் சுத்தம், உடல் ஆரோக்கியமும் போற்றும்றும் சீனாவைப் போல் நம் நாடு என்றாகும் எனும் ஏக்கம் வந்தது கூடவே!

    ReplyDelete
  8. சுற்றுலா மணம்
    தமிழ் மணமாக
    வீசட்டும்...
    தொடருங்கள்!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...