புதுமைமிக சீனாவும் ஹாங்காங் மெக்கா-அதன்
போற்றமிகு முன்னேற்றம் காணத் தக்கா!
முதுமைமிகு வயதினிலே சுற்றி வந்தேன் -ஆனால்
முதுகுவலியும் கால்வலியும் பெற்று நொந்தேன்!
பதுமையென பாவையர்கள் எங்கும் வரவும்-நல்
பாட்டாளி மக்களவர் உழைப்பைத் தரவும்,
எதுவும்நிகர் இல்லையென வளர்ச்சி கண்டேன்-மேலும்
எல்லையில் மகிழ்ச்சிதனை என்னுள் கொண்டேன்!
சீனாவின் சிறப்புதனை கவிதை தன்னில்-இங்கே
செப்பிடவே இயலாதே! அறிய எண்ணில்!
போனால்தான் புரியுமெனல் மிகையோ! அல்ல!-எதிலும்
முன்னேற்றம்! முன்னேற்றம்! எதைநான் சொல்ல!
தானாக வரவில்லை! அந்த நிலையே!- மக்கள்
தந்திட்ட உழைப்பேதான் அதற்கு விலையே
தேனாக இனித்ததே சுற்றுப் பயணம்-அடுத்து
தெரிவிப்பேன் கட்டுரையில் விரிவாய் !நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கட்டுரையை எதிர்பார்க்கிறேன் ஐயா...
ReplyDeleteநன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா.
பயணம் இனிதாக அமைந்தமைக்கு இறைவனை பிராத்திக்கிறேன் ஐயா. தங்களின் பயண அனுபவம் பற்றி கட்டுரையை எதிர் பாக்கிறேன் ஐயா. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
த.ம2வது வாக்கு
என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வடிந்து உருகும் தாயுள்ளம்:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி!
Deleteபுலவர் அய்யா! நீங்கள் “உலகம் சுற்றும் வாலிபன்” உங்கள் பயண அனுபவங்களை ஆவலோடு உங்கள் வலைப் பதிவினில் எதிர்பார்க்கிறேன்!
ReplyDeleteத.ம.3
பயணம் இனிதாய் முடிந்தமைக்கு முதலில் இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொள்ளுங்கள் அடுத்து சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் ஐயா
ReplyDeleteநன்றி!
Deleteமகளே நலமா ?.என்று கேட்டிருந்தீர்கள் ஐயா !
ReplyDeleteபாசமிகு தெய்வங்கள் தங்களின் அன்பு நிறைந்த வாழ்த்தினிலே தினமும்
விழித்தெழும் என் நலன் குறித்துக் கவலையே வேண்டாம் ஐயா நான்
இப்போது பூரண குணமடைந்து வருகின்றேன் .தங்களையும் இறைவன்
எப்போதும் காத்தருள வேண்டும் என்று வணங்கி நிற்கின்றேன் ஐயா !
சுற்றுப் பயண அனுபவம் கண்டு மகிழ்ந்தேன் !
மேலும் தொடருங்கள் ஐயா ஆவலோடு படிக்கவும் காத்திருக்கின்றோம் .
நன்றி!
Deleteதேனாக இனித்ததே சுற்றுப் பயணம்-அடுத்து
ReplyDeleteதெரிவிப்பேன் கட்டுரையில் விரிவாய் !நன்றி!//
தங்கள் சுற்றுப்பயணம் தேனாய் இனித்ததது கேட்டு மகிழ்ச்சி ஐயா!
சுற்றுப்பயணக் கட்டுரை எப்போது?
இனிய சீனா பயணத்தை விபரமாக தொடர்ந்து பகிருங்கள் ஐயா.
ReplyDeleteகட்டுரையை காண இருக்கின்றேன் ஐயா,
ReplyDeleteகவிதைப்போட்டிக்கு அனுப்பிய எமது கவிதைக்கு வாருங்கள் ஐயா.
கட்டுரையை எதிர் பார்க்கிறேன் புலவர் ஐயா.
ReplyDeleteத.ம. 7
பயணக் கட்டுரைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன் ஐயா
ReplyDeleteதம 7
சீக்கிரம் சொல்லுங்கய்யா ,சொல்லுங்க !
ReplyDeleteத ம 9
உங்கள் பயணம் சிறப்பாக அமைந்தது அறிந்து மகிழ்ச்சி..... விரிவான கட்டுரைகளைப் படிக்க ஆவலுடன் நானும்.....
ReplyDeleteபாவரிகளில் சீனப் பயணம்
ReplyDeleteசிறந்த பகிர்வு
தொடருங்கள்
நானும் கால் வலி முதுகு வலிக்குப் பயந்து இணையத்திலேயே இந்த ஊர்களையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறேன், ஐயா. உங்கள் கட்டுரையைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ReplyDeleteஆவலுடன் எதிர்பார்கிறேன்
ReplyDelete