Thursday, July 24, 2014

மலராத மொட்டுகளை கசக்கி முகரும் –எவரும் மாபாவி! மனநோயர்! என்றே பகரும்!



பத்துவயதுக்கு உட்பட்ட சிறுமி தம்மை –நாளும்
பாலியல் பலத்காரம் செய்யும் உம்மை!
கொத்துகறி போட்டாலும் தவறே இல்லை-காமக்
கொடுயோர்க்கு தண்டணை! அதுவே எல்லை!

மலராத மொட்டுகளை கசக்கி முகரும் –எவரும்
மாபாவி! மனநோயர்! என்றே பகரும்!
புலராத விடியல்போல் இருளே சூழும்-அந்த
புண்பட்ட இளங்குறுத்து எவ்வண் வாழும்!

காமுகரே! காமுகரே! வேண்டாம் கொடுமை –வாழும்
காலம்வரை வருந்துகின்ற பழியாம்! மடமை!
ஆமிதுவே! அறிவீரே! திருந்தப் பாரீர்-பெற்ற
அன்னையவள் பெண்தானே ! எண்ணிக் காரீர்!

செய்தித்தாள் செப்புவது நாளும் இதையே- என்ன
செய்வதெனத் தெரியாமல் திகைத்தல் விதியே!
உய்தித்தான் வந்திடுமா….? ஏங்கும் உள்ளம்- மனித
உருவத்தில் மிருகமா….? துயரே கொள்ளும்!

புலவர் சா இராமாநுசம்

9 comments :

  1. மிக அருமையான கருத்துக் கவிதை ஐயா!
    கொத்துகறி போட்டாலும் தவறே இல்லை-காமக்
    கொடுயோர்க்கு தண்டணை! அதுவே எல்லை!// கயவர்களை என்ன செய்தாலும் தகும்!

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா
    கவிதையின் வரிகள் இதயத்தை நெருடியது... பகிர்வுக்கு வாழத்துக்கள் ஐயா
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. "செய்தித்தாள் செப்புவது நாளும் இதையே- என்ன
    செய்வதெனத் தெரியாமல் திகைத்தல் விதியே!" என
    இன்றைய சூழலின் இதயத் துடிப்பறிந்து
    நன்றே ஆக்கினீர்
    "மலராத மொட்டுகளை கசக்கி முகரும் –எவரும்
    மாபாவி! மனநோயர்! என்றே பகரும்!" என்றே...

    ReplyDelete
  4. உங்களின் கோபமும் கவலையும் வரிகளில் தெரிகிறது புலவர் ஐயா.

    ReplyDelete
  5. தங்களது கோபத்தில் கனல் தெறிக்கிறது ஐயா இவர்களை என்ன செய்தாலும் தகுமே...

    எனது பதிவு தற்போது ''தாலி''

    ReplyDelete

  6. வணக்கம்!

    தமிழ்மணம் 5

    என்ன கொடுமை! இரும்புத் தடிக்கொண்டு
    பன்னியைக் கொல்லல் பயன்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  7. மகாபாவி ஐயா
    கடுமையான தண்டனைகளை வழங்கியே இந்நோயைக் குணப்படுத்த வேண்டும் ஐயா
    நன்றி
    தம 6

    ReplyDelete
  8. இப்படிப்பட்ட சண்டாளர்களுக்கு அரபுநாட்டு பாணியில் தண்டனைக் கொடுத்தாலும் தகும் !
    த ம 7

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...