பழையகள்ளு புதியமொந்தை ஆன தென்றே –இன்று
பாராள வந்தோரின் செயலும் ஒன்றே
பிழையை நீக்கி நன்மைதர முயலவில்லை-எதிர்த்து
பேசுதற்கும் நாதியுண்டா! அதுதான் தொல்லை
வாக்குறுதி தந்த தெல்லாம் வெற்றுச் சொல்லே-ஏழை
வாழ்வதற்கு யார்வரினும் வாழியே இல்லே
நாக்குறுதி இல்லாதார் நாடகம் தானே-இங்கே
நடக்கிறது நாள்தோறும் வருந்தல் வீணே
ஆளுக்கொரு கருத்தென்று அமைச்சர் சொல்ல-மோடி
அரசாங்கக் கட்டுப்பாடும் தளரும் மெல்ல
நாளுக்கொரு விளக்கமதில் ! நன்மையல்ல ஐயா –சற்று
நாவடக்கம் வேண்டும்! ஆய்வீர்! மெய்யா
விலைவாசி குறைவதற்கு ஏற்றவழி காண்பீர் –நாட்டில்
வீணாகும் நதிநீரை தடுக்கவழி பூண்பீர்!
தலையாய திட்டங்களை முன்னெடுத்து வருவீர் –மொழித்
தகராறு தலைதூக்கா உறுதிமொழி தருவீர்!
புலவர் சா இராமாநுசம்
இன்றைய போக்கு ,வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளதை நன்றாக் சொன்னீர்கள் அய்யா !
ReplyDeleteத ம 1
நன்றி!
Deleteபுலவர் பெருமானின் மனம் நோகும் காரியங்களைச் செய்யவேண்டாம் என்று மத்திய மாநில அரசுகளை எச்சரிக்கிறேன்!
ReplyDeleteநாட்டு நிலைமையைச் சுட்டிக் காட்டினீர்கள்
ReplyDeleteகாலம் பதில் சொல்லட்டும்
நன்றி!
Deleteபுதிய மொந்தை என்றாலும்
ReplyDeleteபழைய கள்ளு தானே.....
அதன் குணம் மாறிடுமா என்ன? என்பதை அழகாக எடுத்துரைத்தீர்கள்.
அருமையான கவிதை புலவர் ஐயா.
நன்றி!
Deleteஅருமை ஐயா
ReplyDeleteஅருமை
தம4
நன்றி!
Deleteசரியாகச் சொன்னீர்கள் ஐயா...
ReplyDeleteநன்றி!
Delete