உறவுகளே!
11-3-2013 , அன்று நான் கச்சத்தீவு பற்றி எழுதிய கவிதையே
இதுவாகும் இன்றும் அது பொருந்துவதைப் பாருங்கள்!
மனித நேயம் இல்லையா
மத்திய அரசே சொல்லையா?
தினமேத் தொல்லைப் படுகின்றான்
தேம்பியே மீனவன் கெடுகின்றான்
மனமே இரங்க வில்லையா
மனதில் அரக்கனா சொல்லையா!
சுண்டைக் காய்போல் அந்நாடே
சொன்னால் வெட்கம் பெருங்கேடே
அண்டையில் இருந்தேத் தரும்தொல்லை
அளவா? அந்தோ துயரெல்லை!
கச்சத் தீவைக் கொடுத்தீரே!
காரணம் எதுவோ ?கெடுத்தீரே!
அச்சப் பட்டே மீனவனும்
அல்லல் படுவதைக் காண்பீரே!
படகொடுப் பிடித்தே மீனவரைப்
பாழும் சிறையில் தள்ளுகின்றான்!
இடமிலை மீனவர் உயிர்வாழ
எண்ணமும் உமக்கிலை அவர்வாழ!
மாநில அரசையும் மதிப்பதில்லை!
மத்திய அரசுக்கோ செவியில்லை!
நாமினி செய்வதை ஆய்வோமா?
நல்லது நடப்பின் உய்வோமா?
கடிதம் எழுதினால் போதாதே
காரியம் அதனால் ஆகாதே!
முடிவது எதுவென எடுப்பீரா
முடங்கிட மீனவர் விடுப்பீரா?
அலைகடல் தானே அவன்வீடாம்
அந்தோ! இன்றது சுடுகாடாம்!
நிலைமை அப்படிப் போகுமன்றோ
நிம்மதி, அமைதி ஏகுமன்றோ?
புலவர் சா இராமாநுசம்
ReplyDeleteவணக்கம்!
தமிழ்மணம் 1
அன்று படைத்த அருந்தமிழைக் கண்ணுற்றேன்!
இன்றும் பொருந்துமென எண்ணு!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
மிக்க நன்றி!
Deleteகாலம் மாறினாலும் நிலைமை மாறவில்லை என்பது வேதனைதான்! சிறப்பான படைப்பு! நன்றி!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
காலம் மாறும் விரைவில்.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி!
Deleteகாலம் மாறணும்
ReplyDeleteகனிய வேண்டும்
நல்ல தீர்வு!
காலம் ஒரு நாள் மாறும் ஐயா
ReplyDeleteஎன்றைக்கும் பொருந்தக் கூடாது ஐயா
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஇதுவும் கடந்து போகும் என்பதே உண்மை நல்ல காலம்
ReplyDeleteவிரைந்து கிட்ட வேண்டும் ஐயா !
இன்று மட்டும் இல்லை
ReplyDeleteஎன்றும் பொருத்தமானதாக ஆகிவிடுமோ
எனப் பயமாக உள்ளது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி!
Deletetha.ma6
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteகாலம் மாறியும் காட்சி மாறவில்லை என்பதுதான் வருத்தாமான விஷயம்...
ReplyDeleteகவிதை அருமை ஐயா...
தமிழக மீனவர்களும் இந்திய மீனவர்களே என்று மத்திய அரசு நினைக்கும் நாள் என்று வருமோ ?
ReplyDeleteத ம 8
மிக்க நன்றி!
Deleteநல்லநாளும் வரும்என நம்புவோம்.
ReplyDeleteநம்புவோம் ஐயா காலம் வரும்.... அதுவரை.
ReplyDeleteமீனவர் துயரம் தீர்க்க எந்த மத்திய அரசும் முன்வராதது வேதனை.
ReplyDelete