பிறப்பு வாழ்வில் ஒருமுறைதன்-மேலும்
இறப்பு வாழ்வில் ஒருமுறைதான்!
இருப்பது நாமே எதுவரையில்-இதை
எவரும் அறியார் இதுவரையில்!
சிறப்பு பெறநாம் வாழ்ந்தோமா-என
சிந்தனை தன்னில் ஆழ்ந்தோமா!
வெறுப்பா மற்றவர் நமைநோக்க-பெரும்
வேதனை வந்து நமைத்தாக்க!
எண்ணிப் பாரீர் மனிதர்களாய்-பல்
இதயம் வாழ்த்த புனிதர்களாய்!
மண்ணில் வாழ்ந்த காலத்தே-பிறர்
மனதில் திகழ ஞாலத்தே!
கண்ணிய முடனே வாழ்ந்தோமா-நம்
கடமை அதுவென ஆய்ந்தோமா!
பண்ணிய பாபம் ஏதுமிலை-எனில்
பயப்பட வாழ்வில் எதுவுமிலை!
மரணம் நம்மைத் தேடிவர-கேட்ட
மக்கள் அனைவரும் ஓடிவர!
வரமே பெற்றோம் நாமென்றே-அங்கு
வந்தோர் வாழ்த்த மிகநன்றே!
கரமே குவித்துக் கண்ணீரை-அவர்
காணிக்கை யாக்க பண்ணீரேல்!
தரமாம் உமது வாழ்வாகும்-பெயர்
தரணியில் என்றும் நிலையாகும்!
புலவர் சா இராமாநுசம்
வணக்கம்
ReplyDeleteஐயா
மனித வாழ்க்கை தத்துவத்தை மிக அருமையாக கவிதையில் சொல்லியுள்ளீர்கள்
இதுதான் உண்மையும் கூட... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteத.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி!
Deleteவணக்கம் ஐயா
ReplyDeleteவாழ்வின் நோக்கத்தைத் தங்கள் வைரவரிகள் அழகாக எடுத்து இயம்புகிறது ஐயா. தன் நலன் பேணாமல் பிறர் நலன் பேணியவர்கள் தான் அவர்கள் இறந்த பின்னும் இம்மாவுலகில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் வசந்தங்கள் வரவேற்கும். பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.
"புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற் பின் சாக்காடு
Deleteஇரந்துகோள் தக்க துடைத்து" என்ற குரலை ஓர் இனிய கவிதையாக்கி விட்டீர்களே! - இராய செல்லப்பா (இப்போது நியூ ஜெர்சியில்)
மிக்க நன்றி!
Deleteவாழ்வின் நோக்கத்தை அழகாக சொல்லிடீங்க அய்யா..
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteசிறப்பான சிந்தை வரிகள் அய்யா..
ReplyDeleteஇறந்த பின்னும் மற்றவர்கள் மனத்தில் இருப்பார்!!
ReplyDeleteஅருமையான கவிதை புலவர் ஐயா.
ஏன் இப்பொழுது இந்த மாதிரி கவிதைகளை எழுதுகிறீர்கள்....?
“என் எழுதுகோல்” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதுங்கள் ஐயா.
மகளே! வயதாகி விட்டதல்லவா! அதன் வழிவரும் சிந்தனைகள்
Deleteநிலையாமை பற்றியதாகதானோ இருக்கும்!!!! உன் அன்புக் கட்டளைக்கேற்ப கூறிய தலைப்பில் விரைவில் எழுதுகிறேன்
"எண்ணிப் பாரீர் மனிதர்களாய்-பல்
ReplyDeleteஇதயம் வாழ்த்த புனிதர்களாய்!
மண்ணில் வாழ்ந்த காலத்தே-பிறர்
மனதில் திகழ ஞாலத்தே!" என்ற
அடிகளை அடியேன் விரும்புகிறேன்!
சிறந்த எண்ண வெளிப்பாடு
உங்கள் அனுபவ வரிகள்! ஆராய்ந்து பார்த்தால் வாழ்க்கை ஒரு புரியாத் புதிர்!
ReplyDeleteத.ம.4
எண்ணிப் பாரீர் மனிதர்களாய்-பல்
ReplyDeleteஇதயம் வாழ்த்த புனிதர்களாய்!
மண்ணில் வாழ்ந்த காலத்தே-பிறர்
மனதில் திகழ ஞாலத்தே//// உண்மை அய்யா
அருமை.....
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteஐயா
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-