பகல்கொள்ளை அடிக்கின்றார் தனியார் இன்றே- கல்விப்
பணியென்ற பெயராலே நாளும் நன்றே!
நகக்கண்ணில் ஊசிதனை ஏற்றல் போல –ஏழை
நடுத்தர குடும்பங்கள் கடனில் மாள!
அகந்தன்னில் பொருளாசை மிகுந்து போக –அரசு
அதிகார வர்கமிதை அறிந்தும் ஏக!
புகலின்றி வாடுதலும் கொடுமை அன்றோ –மக்கள்
புலம்புவதும் தீருகின்ற நாளும் என்றோ!
ஆங்கிலத்தை முதலீடாய் வைத்துக் கொண்டே –நடக்கும்
அநியாயம் இதுவென்றே எடுத்து விண்டே!
ஓங்குபுகழ் தமிழ்தன்னை ஒதுக்கித் தள்ளி –இதுவும்
ஒவ்வாது என்பாரின் உணர்வை எள்ளி!
தீங்குதனை அறியாது தேடிச் செல்வார் –கடலில்
திசையறியாக் கப்பலென! எவ்வண் வெல்வார்!
நீங்குவழி காணவில்லை! வணிகம் தானே –கல்வி
நிலையென்றால் ! அதற்காக வருந்தல் வீணே!
புலவர் சா இராமாநுசம்
"நீங்குவழி காணவில்லை! வணிகம் தானே –கல்வி
ReplyDeleteநிலையென்றால் ! அதற்காக வருந்தல் வீணே!" என்ற
வரிகளை வரவேற்கிறேன்
visit http://ypvn.0hna.com/
ஆட்சியாளர்களின் அனுமதியுடன் நடக்கும் கல்வி வியாபாரம். இந்நிலை இனி மாற நூறாண்டாகும்!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
காலம் அறிந்து கவிதை வடித்துள்ளீர்கள் ஐயா... கல்வி வியாபரமாகியது..இன்று
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ஐயா!மீண்டும் சந்திப்பது மிக்க மகிழ்ச்சி..!மிகச்சரியாக விமர்சித்து வடித்திருக்கிறீர்கள்.அருமை
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
இன்று நடக்கும் இழிவுகள் மாய்ந்தோட
என்றமையும் நல்லரசு இங்கு!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
மிக்க நன்றி!
Delete
ReplyDeleteதமிழ்மணம் 2
இன்றைய பெற்றோர் கொட்டிக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் ஐயா.
ReplyDeleteஎங்களைப் போன்றோர் வேலை பார்க்கும் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க ஊர் ஊராக நாங்கள் அலைகிறோம்.
ஆனால் இலட்சக் கணக்கில் பணத் செலத்தத்தான் பெற்றோர்கள் துடிக்கிறார்கள்
உண்மை நிலைகள்...
ReplyDeleteவருத்தப்பட வைக்கும் நிலை ஐயா...
மிக்க நன்றி!
Deleteஉண்மை நிலை.. இதை அறிந்தும் அறியாமையில் சிக்கியிருக்கும் மக்கள் அதிகம்.. இப்படியான பள்ளிகளில் தன் குழந்தைகள் சேர்ந்து படிப்பதை ஒரு கௌரவமாக கூட நினைக்கிறார்கள்..
ReplyDeleteமனதை உருக்கும் கவிதை வரிகள் பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteதமிழ்மணம் 6
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteநகக்கண்ணில் ஊசிதனை ஏற்றல் போல –ஏழை
ReplyDeleteநடுத்தர குடும்பங்கள் கடனில் மாள!///ஆம் அய்யா யாராலும் மறுக்க முடியாத உண்மை
நகக்கண்ணில் ஊசிதனை ஏற்றல் போல –ஏழை
ReplyDeleteநடுத்தர குடும்பங்கள் கடனில் மாள
அழகாகச் சொன்னீர்கள் புலவரே. உண்மை.
அரசு ஏற்க வேண்டிய கல்விச்சாலைகளை தனியாருக்கு விட்டு மதுபானங்களை அரசு ஏற்று நடத்துவதால் இதுவும் நடக்கும் இன்னும் நடக்கும்..
கல்வி வியாபாரமாகிவிட்டதே ஐயா.......
ReplyDelete