Monday, May 5, 2014

ஆள்வோரும் ஆண்டோரும் மாறிமாறி –தினம் அறிக்கைகளை விடுவதா இன்று தேவை!





ஆள்வோரும் ஆண்டோரும்  மாறிமாறி –தினம்
   அறிக்கைகளை விடுவதாஇன்று  தேவை!
மாள்வாரோ! மேன்மேலும் குண்டும் வெடிக்க –இதுவா
    மக்களுக்கு நாம்நாளும் செய்யும்  சேவை!
தோளோடு  தோள்சேர  ஒன்று  படுவோம் – இதுவே
   தொடர்கதை  ஆனாலே  முற்றும்  கெடுவோம்!
வாள்மீது நடப்பதாம்! இன்றை  நிலையே –மக்கள்
   வாழ்வுக்கு அணுவளவும் காப்பு  இலையே!

சாதிமதம்  கட்சியென  பேதம்  இன்றி –தமிழ்
   சமுதாயம் ஒன்றெனவே  நம்முள் ஒன்றி
பீதியின்றி நடமாட மக்கள்  எங்கும் –வீண்
   பேச்சுகளை தவிர்ப்பீரே! பகமை  மங்கும்!
மேதினியில் தமிழ்நாட்டின் மேன்மை  ஒங்க –இனி
   மேலுமிங்கே வெடிக்காமல் அச்சம்  நீங்க!
வீதிதோறும்  பாதுகாப்பு குழுக்கள்  வேண்டும்- மத
   வெறியர்களை வேரோடு அழிப்போம் யாண்டும்!

புலவர்  சா  இராமாநுசம்

13 comments:

  1. ஆள்வோர் புரிந்து கொள்ள வேண்டும்! அருமையான கவிதை ஐயா!

    ReplyDelete
  2. ஒருவரை ஒருவர் குறை சொல்வதை முதலில் நிறுத்த வேண்டும் ஐயா

    ReplyDelete
  3. அறிக்கை மட்டும் தான் இவர்கள் விடுவார்கள். எந்த விதத்திலும் செயலில் காட்டுவதில்லை....

    ReplyDelete
  4. பேசுவதில் மட்டும் தான் கில்லாடிகள்...

    ReplyDelete
  5. அரசியல்வாதிகள் தாம் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் .உணர்வுபூர்வமாக எழுதப்பட்ட கவிதை வரிகள் கண்டு துடித்தேன் .வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
  6. சுயநல அரசியல்வியாதிகள் இருக்கும் வரை இப்படிதான் இருக்கும்போல, உங்கள் கவிதையின் வேதனை புரிகிறது அய்யா !

    ReplyDelete

  7. வணக்கம்!

    மதமெனும் பொல்லா மதம்பிடித்தால் பாரின்
    இதமெலாம் போகும் எாிந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  8. நாடு நலம்பெற நீங்கள் விட்ட கவிதை அறிக்கை போற்றத் தக்கது !
    த ம 7

    ReplyDelete
  9. காலத்துக்கு ஏற்ற கவிதை புலவரே.

    ReplyDelete
  10. "சாதிமதம் கட்சியென பேதம் இன்றி –தமிழ்
    சமுதாயம் ஒன்றெனவே நம்முள் ஒன்றி
    பீதியின்றி நடமாட மக்கள் எங்கும் –வீண்
    பேச்சுகளை தவிர்ப்பீரே! பகமை மங்கும்!" என்ற
    வழிகாட்டலை வரவேற்கிறன்!

    ReplyDelete
  11. //சாதிமதம் கட்சியென பேதம் இன்றி –தமிழ்
    சமுதாயம் ஒன்றெனவே நம்முள் ஒன்றி//

    நன்றே சொன்னீர் நல்லதொரு வாக்கு
    நல்லதொரு மனிதனாய் இதை நினைவில் கொண்டால்
    நாளைய சமுதாயம் நல்லோர் கையில்.

    வாழ்த்துகள் அய்யா!.

    ReplyDelete
  12. உண்மையான ஆதங்கம் புரிகிறது

    ReplyDelete