ஏழைபண காரருக்கு
நீதி ஒன்றே –என
எண்ணிவிட இயலாத நிலைதான்
இன்றே!
பேழைதனில் உள்ளபணம் மாற்றி விடுமே –அறப்
பிழையன்றோ
இதனாலே முற்றும் கெடுமே!
கோழைகளாய் வாய்மூட
குமுறும் நெஞ்சம் –ஏழை
குரலங்கே
எடுபடுமா! அந்தோ அஞ்சும்!
வாழவழி செய்திடுமா புதிய ஆட்சி
–இனி
வருங்கால நடைமுறைகள் வழங்கும் சாட்சி!
வற்றாத ஊற்றாக
ஊழல் இங்கே –இனியும்
வளர்ந்திட்டால் வந்திடிமா வளமை அங்கே!
முற்றாக ஒழித்திடவே வழிகள் தேடி
–அதை
முதற்பணியாய் செய்வீரேல் நன்மை கோடி!
உற்றாரா ! உறவினரா உரிமை கொண்டே –எவர்
உம்மிடமே வந்தாலும் மறுத்து விண்டே!
பொற்றா மரையாக விளங்க வேண்டும் –அரசின்
புகழுக்கே, சான்றாகும் ! அதுவே ஈண்டும்!
புலவர் சா இராமாநுசம்
விளங்கும் எனத்தான் நம்புகிறோம்
ReplyDeleteநம்பிக்கை உண்மையாகட்டும்
tha.ma 1
ReplyDeleteமோடி அரசுக்கு நீங்கள் அளித்த அழகான வரவேற்புக்கவிதைக்கு நன்றி ஐயா! கலைஞரும் ஜெ.யும் இனி மோடியிடம் சலுகை கோரமுடியாத நிலைமையை மக்கள் ஏற்படுத்திவிட்டார்கள். முதுகெலும்பு உள்ள மோடி நிச்சயம் ஊழலற்ற நல்லாட்சி தருவார் என்பது உறுதி.
ReplyDeleteஊழலற்ற ஆட்சியை எதிர்பார்ப்போம் ஐயா
ReplyDeleteநல்லது நடந்தால் சரி தான் ஐயா...
ReplyDelete"வற்றாத ஊற்றாக ஊழல் இங்கே –இனியும்
ReplyDeleteவளர்ந்திட்டால் வந்திடிமா வளமை அங்கே!
முற்றாக ஒழித்திடவே வழிகள் தேடி –அதை
முதற்பணியாய் செய்வீரேல் நன்மை கோடி!" என்ற
இனிய வழிகாட்டலை வரவேற்கிறேன்!
ஏழைச் சொல் அம்பலம் ஏறவேண்டுமென்ற அனைவரின் ஆதங்கத்தை அருமையாக கவிதையில் வடித்து விட்!டீர்கள் !
ReplyDeleteத ம 6
த.ம. ஏழு
ReplyDeleteபொற்றாமரை கனவுகள் நனவாகுமா புலவரே...
காலம் பதில் சொல்ல வேண்டும்..
நடக்குமென நம்பிக்கை கொண்டு வாழ்வோம்..
ReplyDeleteஅதை கவியில் வடித்த விதம் சிறப்பு..
நல்லதே நடக்கும் என நம்புவோம்....
ReplyDeleteநம்புவோம் ஐயா! நம்பிக்கைதானே வாழ்க்கை!
ReplyDeleteமிக அழகான கவிதை!
நம்பிக்கை கொள்வோம் ஐயா
ReplyDeleteஇனியேனும் மாறினால் நல்லதுதான் அய்யா
ReplyDelete