Wednesday, May 14, 2014

இருப்பது இடையில் ஒருநாளே – பதவி ஏற்பவர் தெரியும் மறுநாளே!





இருப்பது  இடையில்  ஒருநாளே – பதவி
   ஏற்பவர்  தெரியும்  மறுநாளே!
பொறுப்பொடு  செயல்பட  வேண்டுமே –கடந்து
   போனதை  தோண்டிட  வேண்டாமே!
விருப்பு வெறுப்பு  இல்லாமல் –யாரும்
   வேதனைப்  படும்படி  சொல்லாமல்!
சிறப்பொடு நேர்மையாய்  செயல்படுவீர்- என
   செப்பிட  மக்கள்   முற்படுவீர்!

வென்றவர்  தோற்றவர்  இருவீரும் –தம்
   வேற்றுமை  மறந்து  ஒருவீராய்!
நின்றெவர்  வரினும்  பொதுநலமே –என்றும்
   நிலையன  துளியும்  சுயநலமே!
இன்றென  பதவி  ஏற்பீராம் -ஆட்சி
   இனித்திட! மக்களைக்  காப்பீராம்!
நன்றென மக்கள் வாழ்த்தட்டும் – இந்த
   நாட்டை மகிழ்ச்சியில்  ஆழ்த்தட்டும்!

புலவர்  சா  இராமாநுசம்
  

12 comments:

  1. உங்கள் கவிதையைப் படித்ததும், இரண்டு சோழ மன்னர்களுக்கு இடையில் போர் மூண்டபோது “தோற்பது நும் குடியே” எனச் சமாதானம் செய்யச் சென்ற சங்கப் புலவர் கோவூர் கிழார் எனது நினைவுக்கு வந்தார் அய்யா! வாழ்க உமது நல்லெண்ணம்!

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா

    காலத்துக்கு ஏற்பகவிதை எழுதிய விதம் அருமையாக உள்ளது வாழ்த்துகள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. பதவிக்கு வருபவர்கள் உங்கள் ஆலோசனையின் படி நடந்தால் நல்லதே !
    த ம 2

    ReplyDelete
  4. இன்றென பதவி ஏற்பீராம் -ஆட்சி
    இனித்திட! மக்களைக் காப்பீராம்!//புலவர் வாக்கு பொய்யாகாது

    ReplyDelete
  5. சிறப்பான ஆலாசனை பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .

    ReplyDelete
  6. வேற்றுமை மறந்து ஒருவீராய் நடப்பதென்பது இயலாத காரியம் நம் தலைவர்களுக்கு....

    ReplyDelete
  7. காசின் ஓசைகளுக்கு நடுவே இந்தக் கவிதையின் ஓசை அரசியல்வாதிகளின் காதுகளுக்குக் கேட்டால் நலம்.

    கவிதை நன்றாகவுள்ளது புலவரே.

    ReplyDelete
  8. ஆலோசனைகள் செயலானால் நன்றாக இருக்கும் ஐயா...

    ReplyDelete
  9. தக்க சமயத்தில்
    தக்க அறிவுரை
    பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. நல்ல ஆலோசனைகள்.... நாளை வரை காத்திருக்க வேண்டும் - வெற்றி பெற்றவரைத் தெரிந்து கொள்ள.....

    ReplyDelete
  11. //வென்றவர் தோற்றவர் இருவீரும் –தம்
    வேற்றுமை மறந்து ஒருவீராய்!//
    இருந்தால் அற்புதம்தான்! நன்றி ஐயா!

    ReplyDelete