Sunday, May 11, 2014

அன்னையர் தினம்



  அன்னையர்  தினம்

சுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை
சுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்!
அமைவாரே ஓய்வாக! ஆனால் தாயே-கருவில்
அடிவயிறு நாள்தோறும் கனக்கத் நீயே!
எமைதாங்கி பத்துமாதம் சுமந்தீர் அம்மா-அதை
எள்ளவும்  நினைந்தீரா  சுமையாய்! அம்மா!
இமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த
ஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே?

உண்ணுகின்ற உணவென்ன பார்துத் தானே-நான்
உண்டான நாளைமுதலே உண்டுத் தானே!
கண்ணுறக்கம் இல்லாமல பெற்றீர் அம்மா-ஏனோ
கண்முடிப் போனிரே அம்மா அம்மா!
மண்மூடிப் போனாலும் அந்தோ உன்னை-மனம்
மூட யியலாது வருந்தும்! அன்னை
பண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ
பறந்தாயா சொல்லாமல் எங்கே எங்கே?

புலவர் சா இராமாநுசம்

17 comments:

  1. ரசித்தேன். அம்மா எங்கேயும் போய்விடவில்லை. நம் மனதில் என்றும் நிரந்தரமாய்...... நமக்கு வழிகாட்டியாய்....!

    ReplyDelete
  2. பெற்ற அன்னைக்கு
    செந்தமிழால் ஒரு வாழ்த்து
    அருமை ஐயா
    நன்றி

    ReplyDelete

  3. "உண்ணுகின்ற உணவென்ன பார்துத் தானே-நான்
    உண்டான நாளைமுதலே உண்டுத் தானே!
    கண்ணுறக்கம் இல்லாமல பெற்றீர் அம்மா-ஏனோ
    கண்முடிப் போனிரே அம்மா அம்மா!" என ஆக்கிய
    அன்னையர் நாள் நினைவூட்டலை விரும்புகிறேன்.

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா.

    கவிதையின் வரிகள் தித்திக்குது... நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. கடந்த பதிவு மனைவிக்கு அஞ்சலி ,இன்று தாய்க்கு அஞ்சலி ,இருவருக்கும் பாமாலை சூட்டியதால் ஆசீர்வாதங்கள்உண்டு அய்யா உங்களுக்கு !
    த ம 4

    ReplyDelete
  6. சிறப்பு...

    அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. சிறந்த நாளுக்கு சிறப்பு சேர்க்கும் கவிதை. நன்றி.

    ReplyDelete
  8. பிரிவுத்துயரிலேயே ஈடுசெய்ய முடியாத துயர் தாயை தாயை இழந்துநிற்கும் துயர்தான். அருமையான கவி வரிகள். அன்னையர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அன்னையின் பிரிவு அன்பு இதயத்தை வாட்டிடக் கண்டேன்
    பொன்னையே நிகர்த்த கவிதைக்குள் அவளை வைத்துப் போற்றிடவும் கண்டேன் !இந்நாளில் வானத்து நட்சத்திரங்களுடன் கலந்திருக்கும் அவர்கள் மனமும் மகிழ நல் வழி பிறக்கட்டும் ஐயா .

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. அன்னையர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete