Friday, May 2, 2014

யார்செய்தார் ஐயகோ! மாறா சதியோ !-சுவாதி இறந்தாளே! எண்ணுவீர்! அவள்தன் விதியோ!


யார்செய்தார் ஐயகோ! மாறா சதியோ !-சுவாதி
இறந்தாளே! எண்ணுவீர்! அவள்தன் விதியோ!
நேர்செய்ய இயலாத இழப்பாம் அன்றோ- உயிர்
நீங்கிட , கயவர்களே இதுதான் நன்றோ!

வடிகின்ற கண்ணீரோ இரத்தம் ஆக –எப்படி
வாழ்வாராம் பெற்றோரும் துயரம் போக!
வெடிகுண்டு வைத்ததே! கயவர் கூட்டம்-மத
வெறியர்களே ஓயாதா உமது ஆட்டம்!

செடியொன்று மலராமல் கருக லாமா– அந்தோ!
செய்தாரே! இதுமேலும் தொடர லாமா!
மடியின்றி விரைவாக செயல்பட வேண்டும்-மக்கள்
மனதினில் பயமின்றி வாழந்திட ஈண்டும்!

நாள்தோறும் கொலைகொள்ளை! போதாது என்றா-தலை
நகரத்தில் வெடித்தது! வெடிகுண்டு நன்றா!
தேள்போல கொட்டுதே! நெஞ்சத்தில் துயரே-போனால்
திரும்பாத ஒன்றலாவா! வாழ்கின்ற உயிரே!

தூங்காமை துணிவுடமை இரண்டும் இன்றே- அரசு
தொய்வின்றி செயலாற்ற வேண்டும் ஒன்றே!
நீங்காமை வேண்டுமென அய்யன் சொன்னார்-நீதி
நிலைத்திட செய்வீரா!? அடங்க ஒன்னார்!

புலவர் சா இராமாநுசம்

11 comments:

  1. வெடிகுண்டு வைத்ததே! கயவர் கூட்டம்-மத
    வெறியர்களே ஓயாதா உமது ஆட்டம்!

    ReplyDelete
  2. எனக்கும் செய்தியைக் கேள்விப் பட்டதும், டீவியில் பார்த்ததும் உங்கள் மனநிலையில்தான் இருந்தேன். என்ன உலகம் இது? யாரையோ பழிவாங்க அப்பாவிகளைக் கொல்கிறார்கள்.
    த.ம.1

    ReplyDelete
  3. சுவாதியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா

    ReplyDelete
  4. வருத்தமான நிகழ்வு

    ReplyDelete
  5. இப்படி அப்பாவி பெண்ணைக் கொன்றதால் தங்களுக்கு என்ன கிடைத்தது என்று குண்டுவைத்த முட்டாள்கள் எண்ணிப் பார்ப்பார்களா ?
    த ம 6

    ReplyDelete
  6. வேதனைதான் மிஞ்சுகிறது அய்யா...

    ReplyDelete
  7. "நாள்தோறும் கொலைகொள்ளை! போதாது என்றா-தலை
    நகரத்தில் வெடித்தது! வெடிகுண்டு நன்றா!" என்றும்

    "யார்செய்தார் ஐயகோ! மாறா சதியோ !-சுவாதி
    இறந்தாளே! எண்ணுவீர்! அவள்தன் விதியோ!" என்றும்

    நடப்புச் சூழலைத் துயருடன் பகிர்ந்தீர் ஐயா!

    புலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா? http://paapunaya.blogspot.com/2014/05/blog-post.html என்ற பதிவைப் பார்த்துக் கருத்துப் பகிருங்கள் ஐயா!

    ReplyDelete
  8. மும்பையில் நாங்கள் அனுபவிக்கும் மரண பீதிகள், சென்னைதான் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கிறது என்று நினைத்தேன் என் கண்ணே பட்டுருச்சே, கண்ணில் கண்ணீர்....

    ReplyDelete
  9. வருத்தமான நிகழ்வு

    ReplyDelete