யார்செய்தார் ஐயகோ! மாறா சதியோ !-சுவாதி
இறந்தாளே! எண்ணுவீர்! அவள்தன் விதியோ!
நேர்செய்ய இயலாத இழப்பாம் அன்றோ- உயிர்
நீங்கிட , கயவர்களே இதுதான் நன்றோ!
வடிகின்ற கண்ணீரோ இரத்தம் ஆக –எப்படி
வாழ்வாராம் பெற்றோரும் துயரம் போக!
வெடிகுண்டு வைத்ததே! கயவர் கூட்டம்-மத
வெறியர்களே ஓயாதா உமது ஆட்டம்!
செடியொன்று மலராமல் கருக லாமா– அந்தோ!
செய்தாரே! இதுமேலும் தொடர லாமா!
மடியின்றி விரைவாக செயல்பட வேண்டும்-மக்கள்
மனதினில் பயமின்றி வாழந்திட ஈண்டும்!
நாள்தோறும் கொலைகொள்ளை! போதாது என்றா-தலை
நகரத்தில் வெடித்தது! வெடிகுண்டு நன்றா!
தேள்போல கொட்டுதே! நெஞ்சத்தில் துயரே-போனால்
திரும்பாத ஒன்றலாவா! வாழ்கின்ற உயிரே!
தூங்காமை துணிவுடமை இரண்டும் இன்றே- அரசு
தொய்வின்றி செயலாற்ற வேண்டும் ஒன்றே!
நீங்காமை வேண்டுமென அய்யன் சொன்னார்-நீதி
நிலைத்திட செய்வீரா!? அடங்க ஒன்னார்!
புலவர் சா இராமாநுசம்
வெடிகுண்டு வைத்ததே! கயவர் கூட்டம்-மத
ReplyDeleteவெறியர்களே ஓயாதா உமது ஆட்டம்!
எனக்கும் செய்தியைக் கேள்விப் பட்டதும், டீவியில் பார்த்ததும் உங்கள் மனநிலையில்தான் இருந்தேன். என்ன உலகம் இது? யாரையோ பழிவாங்க அப்பாவிகளைக் கொல்கிறார்கள்.
ReplyDeleteத.ம.1
சுவாதியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா
ReplyDeleteதம 4
ReplyDeleteவருத்தமான நிகழ்வு
ReplyDeleteஇப்படி அப்பாவி பெண்ணைக் கொன்றதால் தங்களுக்கு என்ன கிடைத்தது என்று குண்டுவைத்த முட்டாள்கள் எண்ணிப் பார்ப்பார்களா ?
ReplyDeleteத ம 6
வேதனைதான் மிஞ்சுகிறது அய்யா...
ReplyDelete"நாள்தோறும் கொலைகொள்ளை! போதாது என்றா-தலை
ReplyDeleteநகரத்தில் வெடித்தது! வெடிகுண்டு நன்றா!" என்றும்
"யார்செய்தார் ஐயகோ! மாறா சதியோ !-சுவாதி
இறந்தாளே! எண்ணுவீர்! அவள்தன் விதியோ!" என்றும்
நடப்புச் சூழலைத் துயருடன் பகிர்ந்தீர் ஐயா!
புலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா? http://paapunaya.blogspot.com/2014/05/blog-post.html என்ற பதிவைப் பார்த்துக் கருத்துப் பகிருங்கள் ஐயா!
மும்பையில் நாங்கள் அனுபவிக்கும் மரண பீதிகள், சென்னைதான் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கிறது என்று நினைத்தேன் என் கண்ணே பட்டுருச்சே, கண்ணில் கண்ணீர்....
ReplyDeleteவேதனை தந்தது.....
ReplyDeleteவருத்தமான நிகழ்வு
ReplyDelete