Thursday, May 1, 2014

மேதினி போற்றிடும் மேதினமே –உன் மேன்மைக்கே இணைகாணா எம்மனமே!





மேதினி போற்றிடும்  மேதினமே –உன்
  மேன்மைக்கே இணைகாணா  எம்மனமே!
நீதியில்  முதலாளி  ஆட்டமெல்லாம்-என்றும்
   நீங்கிட  வைத்தாயே திட்டமெல்லாம்
வீதியில்  வருகின்றார்  ஆடிப்பாடி –பெற்ற
  விடுதலை ஓங்கிட  உரிமைநாடி
பீதியில் வாழ்வென்றே  வாழுகின்றார்- ஏதும்
   பேதமில்  ஒன்றென  சூழுகின்றார்

உழைப்பவர்  அனைவரும்  ஒற்றுமையாய் –இந்த
   உலகினில்  உரிமையே  பெற்றவராய்
தழைப்பது  உன்னாலே  மேதினமே –சொல்ல
   தன்னிகர் இல்லாத  இத்தினமே
பிழைப்பது எவ்வழி  அறியாமலே – எதிர்த்து,
    பேசிட துணிவும்  தெரியாமலே
அழைப்பது ஆண்டான் அடிமையென –இருந்த
   ஆணவம் நீக்கினாய்  கொடுமையென

புலவர்  சா  இராமாநுசம்
  

11 comments:

  1. அருமை. மே தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. // மேதினி போற்றிடும் மேதினமே –உன்
    மேன்மைக்கே இணைகாணா எம்மனமே! //

    ஆம் அய்யா! மேதினம் என்றாலே மேன்மைதான். உழைக்கும் வர்க்கத்திற்கு வாழ்த்துக்கள் கூறும் தினம்! எனது மே தின வாழ்த்துக்கள்!
    த.ம.2

    ReplyDelete
  3. அற்புதமான மே தினச் சிறப்புக் கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. "அழைப்பது ஆண்டான் அடிமையென – இருந்த
    ஆணவம் நீக்கினாய் கொடுமையென" என்ற வெளிப்படை உண்மையை வெளிப்படுத்தி உள்ளீர்கள் ஐயா!
    சிறந்த பதிவு

    புலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா? (http://paapunaya.blogspot.com/2014/05/blog-post.html) என்ற பதிவிற்குத் தங்கள் பதில் கருத்து என்னவாயிருக்கும்.

    ReplyDelete
  5. உழைக்கும் வர்க்கத்தை உலகுக்கு புரிய வைக்கும் தினம்

    ReplyDelete
  6. மே தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. சிறப்பான கவிதை! மேதின வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  8. அருமை. மே தின வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  9. மே தின வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete