மேதினி போற்றிடும் மேதினமே –உன்
மேன்மைக்கே இணைகாணா எம்மனமே!
நீதியில் முதலாளி
ஆட்டமெல்லாம்-என்றும்
நீங்கிட
வைத்தாயே திட்டமெல்லாம்
வீதியில் வருகின்றார்
ஆடிப்பாடி –பெற்ற
விடுதலை ஓங்கிட உரிமைநாடி
பீதியில் வாழ்வென்றே வாழுகின்றார்- ஏதும்
பேதமில்
ஒன்றென சூழுகின்றார்
உழைப்பவர் அனைவரும்
ஒற்றுமையாய் –இந்த
உலகினில்
உரிமையே பெற்றவராய்
தழைப்பது உன்னாலே
மேதினமே –சொல்ல
தன்னிகர் இல்லாத இத்தினமே
பிழைப்பது எவ்வழி அறியாமலே – எதிர்த்து,
பேசிட துணிவும் தெரியாமலே
அழைப்பது ஆண்டான்
அடிமையென –இருந்த
ஆணவம் நீக்கினாய் கொடுமையென
புலவர் சா இராமாநுசம்
அருமை. மே தின வாழ்த்துகள்.
ReplyDelete// மேதினி போற்றிடும் மேதினமே –உன்
ReplyDeleteமேன்மைக்கே இணைகாணா எம்மனமே! //
ஆம் அய்யா! மேதினம் என்றாலே மேன்மைதான். உழைக்கும் வர்க்கத்திற்கு வாழ்த்துக்கள் கூறும் தினம்! எனது மே தின வாழ்த்துக்கள்!
த.ம.2
அருமை.
ReplyDeleteஅற்புதமான மே தினச் சிறப்புக் கவிதை
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 4
ReplyDelete"அழைப்பது ஆண்டான் அடிமையென – இருந்த
ReplyDeleteஆணவம் நீக்கினாய் கொடுமையென" என்ற வெளிப்படை உண்மையை வெளிப்படுத்தி உள்ளீர்கள் ஐயா!
சிறந்த பதிவு
புலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா? (http://paapunaya.blogspot.com/2014/05/blog-post.html) என்ற பதிவிற்குத் தங்கள் பதில் கருத்து என்னவாயிருக்கும்.
உழைக்கும் வர்க்கத்தை உலகுக்கு புரிய வைக்கும் தினம்
ReplyDeleteமே தின வாழ்த்துக்கள்
ReplyDeleteசிறப்பான கவிதை! மேதின வாழ்த்துக்கள் ஐயா!
ReplyDeleteஅருமை. மே தின வாழ்த்துகள் ஐயா.
ReplyDeleteமே தின வாழ்த்துக்கள் ஐயா
ReplyDelete