இடையில், உள்ளது ஒருநாளே -நமக்கு
இருப்பது
தேர்தலில்! வருநாளே!
படையுள் வீரன் கைவாளே –என
பயன்தர, ஓட்டு அந்நாளே
தடையில் ! சென்றே போடுங்கள்! –உணர்ந்து
தக்கவர்
எவரென தேடுங்கள்
கடையில் விற்கும்
பொருளல்ல- எதிர்
காலத்தின் விதியாம் அதைச்சோல்ல!
ஓட்டுப் போடுதல்
நம்கடமை –அது
ஒன்றே இன்று
நமதுடமை!
காட்டுத் தர்பார்
ஒழியட்டும்!-இலஞ்ச
கயமைக் குணமே அழியட்டும்!
நாட்டு நடப்பை
மாற்றிடவே –வெளி
நாடுகள்
நம்மைப் போற்றிடவே !
கேட்டு மகிழச் செய்வோமே –பெற்றக்
கேடுகள்
நீங்க உய்வோமே!
புலவர் சா இராமாநுசம்
// படையுள் வீரன் கைவாளே //
ReplyDeleteஅருமை ஐயா...
நம் வோட்டைப் பெற்று ஆட்சிக்கு வருவோர் செய்யும் ஊழல்களைப் பார்த்தால் நம் கை வாளால் நம் கண்ணையே குத்திக்கற மாதிரி இருக்கே அய்யா !
ReplyDeleteத ம 2
கடமையை செய்வோம்.
ReplyDeleteகடமையை செய்து உரிமையைக் கேட்போம்
ReplyDeleteஇந்நாளில் எங்கள் கடமை எதுவென மிக அழகாகவும் தெளிவாகவும்
ReplyDeleteஎடுத்துரைத்த கவிதை வரிகளுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .
அருமை ஐயா! கட்டாயம் வாக்கிடுவேன்! நன்றி!
ReplyDeleteநமது கடமையா செய்தாகி விட்டது. வெல்பவர்கள் அவர்கள் கடமையை சரியாக செய்ய வேண்டும்
ReplyDeleteஓட்டுப் போடுவது நம் கடமை.... உண்மை தான் ஐயா.
ReplyDelete