Saturday, April 19, 2014

கற்றாரோ கல்லாரோ கவலை! இல்லை-மிக கவனமுடன் வாக்களிப்பின் தீரும் தொல்லை!



கற்றாரோ கல்லாரோ கவலை! இல்லை-மிக
கவனமுடன் வாக்களிப்பின் தீரும் தொல்லை!
உற்றாரா உறவினரா எண்ணல் வேண்டாம்-நம்
உரிமைதனை ஆய்தேதான் அளிப்பீர் ஈண்டாம்!

கடந்திட்ட காலமதை எண்ணிப் பாரிர்-அதில்
கண்டபலன் என்னவென ,நன்கு ஓரிர்!
நடந்திட்ட தீமைபல! காரணம் யாரே! –மேலும்
நடப்பதற்கு வழிவிட்டால் அழியும் ஊரே!

எரிகின்ற கொள்ளியிலே எந்தக் கொள்ளி –ஐயா
ஏற்றதென கேட்போரே! தெளிவாய் உள்ளி!
புரிகின்ற ,அவர்செயலை கருத்தில் கொண்டே –ஓட்டு
போடுவதே நாட்டுக்குச் செய்யும் தொண்டே!

இன்னாரை ஆதரிக்க வேண்டு மென்றே –இங்கே
எழுதுவது என்வரையில் தவறாம் ஓன்றே!
ஒன்னாரை நீரேதான் உணர வேண்டும் – அது
உம்முடைய ,உரிமையென சொல்வேன் மீண்டும்!


புலவர்  சா  இராமாநுசம்

16 comments :

  1. #நடந்திட்ட தீமைபல! காரணம் யாரே! #
    இப்படி யோசிச்சா ஆண்ட எந்த கட்சியுமே தேறாதே!
    த ம 1

    ReplyDelete
  2. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  3. தக்க சமயத்தில் தக்க அறிவுரை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அருமையா சொன்னீங்க,
    விழிப்புணர்வு பதிவு.


    ReplyDelete
  5. அறிவுரைக்கு நன்றி அய்யா

    ReplyDelete
  6. இருப்பவரில் நல்லவரை தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல கவிதை ஐயா

    ReplyDelete
  7. அருமையாகச் சொன்னீர்கள் அய்யா. வாக்களிப்பை வலியுறுத்தி இப்போது ஒரு பாடல் கூட [நெஞ்சே நீ உன்னைக் கேளாய்] வெளியாகியுள்ளது. விளம்பரங்களும் கூட உலா வருகின்றன. சரியான நேரத்தில் சரியான பதிவு. என் தளத்தில்: கந்தசாமியும் சுந்தரமும் - 02 http://newsigaram.blogspot.com/2014/04/kandasaamiyum-sundaramum-02.html

    ReplyDelete
  8. மிக அருமையாக சொன்னீர்கள்! தங்களின் முதுகு வலி குறைந்துள்ளதா ஐயா? உடல் நலனை கவனத்தில் கொள்ளுங்கள்!

    ReplyDelete
  9. கவனமுடன் வாக்களிப்போம் ஐயா.
    தாங்கள் உடல் நலத்திலும் கவனம் செலுத்துங்கள் ஐயா

    ReplyDelete
  10. அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்...
    உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா....

    ReplyDelete

  11. வணக்கம்!

    புலவா் புகன்றுள்ள பொற்கவியைக் கற்றால்
    உலகம் உயரும் ஒளிா்ந்து!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...