Monday, April 14, 2014

இத்தரை மீதினில் சித்திரைப் பெண்ணே!




 உறவுகளே! எழுத இயலாத நிலை!  ஆனாலும் இன்று ஏதேனும்
தரவேண்டும் என்ற  ஆசை! எப்போதோ  எழுதியது


            இத்தரை மீதினில்
            சித்திரைப் பெண்ணே
            எத்தனை முறையம்மா வந்தாய்-நீ
            என்னென்ன புதுமைகள் தந்தாய்

            எண்ணிப் பதினொரு
            இன்னுயிர் தோழியர்
            நண்ணிப் புடைசூழப் பின்னே-நீ
            நடந்து வருவதும் என்னே

            ஆண்டுக் கொருமுறை
            மீண்டும் வருமுன்னை
            வேண்டுவார் பற்பல நன்மை-அது
            ஈண்டுள மக்களின் தன்மை

            இல்லாமை நீங்கிட
            ஏழ்மை மறந்திட
            வெள்ளாமைத் தந்திடு வாயே-உயிர்
            கொல்லாமைத் தந்திடு வாயே

            ஏரிக்குள மெல்லாம்
            எங்கும் நிரம்பிட
            வாரி வழங்கிடு வாயா-வான்
            மாரி வழங்கிடு வாயா

             புலவர் சா இராமாநுசம்

19 comments :

  1. புலவர் அய்யா அவர்களுக்கு எனது உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! உடல்நலம் பேணவும்.

    ReplyDelete
  2. இல்லாமை நீங்கிட
    ஏழ்மை மறந்திட
    வெள்ளாமைத் தந்திடு வாயே-உயிர்
    கொல்லாமைத் தந்திடு வாயே// உண்மை அய்யா மழை தர வேண்டும்

    ReplyDelete
  3. எப்போதோ எழுதியது என்றாலும் ,அன்று இருந்த உடல் நிலையை ,மகிழ்ச்சியை பிறக்கின்ற புத்தாண்டு தரட்டும் அய்யா !

    ReplyDelete
  4. சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா
    உடல் நிலையைக் கவனித்துக் கொள்ளுங்கள் ஐயா

    ReplyDelete
  5. நலம் பெறவும் வளம் பெறவும்
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  7. இல்லாமை நீங்கிட
    ஏழ்மை மறந்திட
    வெள்ளாமைத் தந்திடு வாயே-உயிர்
    கொல்லாமைத் தந்திடு வாயே//

    இப்படித்தான் நாடு வளமையுடன் இருக்க வேண்டும் என மனது ஏங்குகின்றது! ஐயா!

    த.ம.

    எங்கள் இதயம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. உடல் நலம் பெற பிரார்த்தனைகள்..

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!

    ReplyDelete
  9. எப்போதும் போலின்றி இவ்வாண்டு சிறப்பான நற் பலன்களைத் தாங்கி வர வேண்டும் என்ற தங்களின் எண்ணம் போல் பலரது எண்ணமும் ஈடேற இறைவன் அருள் கிட்டட்டும் ஐயா .பகிர்வுக்கு மிக்க நன்றி இறைவன் அருளால் தங்களுக்கும் உடல் நலன் தேற வேண்டும் என்று புத்தாண்டில் பிரார்த்திக்கின்றேன் ஐயா .

    ReplyDelete
  10. அருமையான கவிதை ஐயா...
    உடல் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ஐயா...

    ReplyDelete
  11. மனம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா....

    ReplyDelete
  12. மிக்க நன்றி!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...