மகளிர் தினம்! கவிதை இரண்டு!
மகளிர் தினமும் இன்றாமே
மகிழும் நிலையா? அன்றாமே!
புகலும் இன்றும் என்னநிலை
பொய்யர்கள் பேசும் மாயவலை
இடமே தனியே ஒதுக்கீடு
ஏனோ பலப்பல குறுக்கீடு
திடமே இல்லை யாருக்கும்
தினமே சொல்வது பேருக்காம்
எத்தனை ஆண்டுகள் போயிற்று
என்ன நடைமுறை ஆயிற்று
ஒத்த கருத்தும் இல்லையே
உதடு உதிர்ப்பது சொல்லையே
மக்கள் அவையே கூடுவதும்
(ஏ)மாற்றக் கருத்தைத் தேடுவதும்
வெக்கக் கேடாம் சொன்னாலே
வேதனை வேதனை இந்நாளே
அந்தோ பாபம் இந்நாளை
அறியா மகளிர் தம்நாளை
வெந்தே தானேக் கழிக்கின்றார்
வீணே இறைவனைப் பழிக்கின்றார்
பெண்களே ஒன்று கூடுங்கள்
பேசியே முடிவைத் தேடுங்கள்
ஆண்களை நம்பின் மோசமே
அடைவீர் மேலும் நாசமே
விரைவில் உமக்கெனத் தனிக்கட்சி
விளைந்தால் மாறும் இக்காட்சி
குறையில் அதனைச் செய்வீரே
கொடுமை நீங்கும் உய்வீரே
சாதி வேண்டாம் உம்மிடையே
சமயம் வேண்டாம் உம்மிடையே
பீதி வேண்டாம் உம்மிடையே
பிரிவினை வேண்டாம் உம்மிடையே
நீதி கேட்டே வருகின்றீர்
நியாயம் கேட்டே வருகின்றீர்
வீதியில் இறங்கி நில்லுங்கள்
வெற்றியே முடிவாய்க் கொள்ளுங்கள்
புலவர் சா இராமாநுசம்
வணக்கம் ஐயா
ReplyDeleteபெண்கள் மசோதா பற்றிய கருத்தையும், பெண்கள் போராட துணிய வேண்டும் எனும் கருத்தையும் தன்னகத்தே கொண்ட கவிதை தன்னம்பிக்கையைத் தருகிறது. பகிர்வுக்கு நன்றி..
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteபேருக்காக சொல்வதை போராடியும் வெல்ல வேண்டும்...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா...
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteஅருமை ஐயா
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Delete'ஆண்களை நம்பின் மோசமே' என்கிறீர்களே, இதைப் படித்தால் என் மனைவி என்னைப் பற்றி என்ன நினைப்பார் என்று கொஞ்சமாவது யோசித்தீர்களா? குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கிவிடுவீர்கள் போலிருக்கிறதே! (2) நல்ல கவிதை. வாழ்க!
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteஊக்கம் தரும்பா உரைத்தீர்! படித்திட
ReplyDeleteதேக்கம் விலகும் தெளிந்து!
அருமை கவிதை புலவர் ஐயா.
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteசிறப்பான அதிலும் பெண்களின் நிலை குறித்து வீறு கொண்டு
ReplyDeleteபடைத்த இப் பகிர்வுக்குத் தலை வணகுகின்றேன் ஐயா !
"பெண்களே ஒன்று கூடுங்கள்
ReplyDeleteபேசியே முடிவைத் தேடுங்கள்
ஆண்களை நம்பின் மோசமே
அடைவீர் மேலும் நாசமே" எனச்
சூடாக வழிகாட்டி உள்ளீர்கள்!
நன்றி.
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteமகளிர் தினம் அன்று சிறப்பான ஒரு அறிவுரை.....
ReplyDeleteத.ம. +1