Saturday, March 8, 2014

உலகப் பெண்கள் தினம்!


உலகப் பெண்கள் தினம்

உலகப் பெண்கள் தினம்பற்றி-மிக
உயர்ந்த மேடையில் பறைசாற்றி!
திலகம் அடடா அவரென்றே-நாம்
தினமும் போற்றுதல் மிகநன்றே!
ஆனால்,
மகளிர்க் கென்றே ஒதுக்கீடும்-ஏனாம்
மக்கள் அவையில் குறுக்கீடும்
சகல கட்சிகள் ஒன்றாகி-பெரும்
சாதனை நிகழ்த்த நன்றாக!
புகல என்னத் தடையங்கே-ஆண்டுகள்
போனது பலவே விடையொங்கே?
மகளிர் கென்றே தனிக்கட்சி-உடன்
மகளிர் தொடங்கின் வருமாட்சி!

தொடங்க வேண்டும் இக்கணமே-மெகா
தொடரும் முடியும அக்கணமே!
அடங்கும் ஆணின் ஆதிக்கம்-பெண்கள்
அணியெனத் திரண்டால சாதிக்கும்!
செய்வீரா--?

புலவர் ச இராமாநசம்



மீள் பதிவு- 2011

17 comments:

  1. பெண்ணுக்கு பெண்ணே எதிரி ஆகாமல் போனால் முன்னேற்றம் காணலாம் !
    த ம +1

    ReplyDelete
  2. சர்வதேச மகளின் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...

    ReplyDelete
  3. மகளிர்கட்சி... நல்ல யோசனைதான்...

    மகளிர் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. ஆணாதிக்கம் எல்லாம் குறைந்து விட்டதய்யா...
    இப்போ பெண்ணுக்கு பெண்தான் எதிரியே...

    நல்ல கவிதை...
    மகளிர் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  5. ஆழமான கருத்துடன் கூடிய
    அற்புதமான கவிதையினை
    மகளிர் தின சிறப்புப் பதிவாகக் கொடுத்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வீறு கொண்டெழுந்த மகளீர் தினக் கவிதை கண்டு மகிழ்ந்தேன்
    அருமையான நற் கருத்திற்குத் தலை வணங்குகின்றேன் .மிக்க
    நன்றி ஐயா பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  7. மிக அருமையான கவிதை ஐயா! அற்புதமான கருத்தை, பெண்ணைப் போற்றும் கருத்தை பகிர்ந்ததற்கு!

    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  8. அருமையான கருத்து ஐயா
    நன்றி

    ReplyDelete
  9. மகளிர்க்கென்று ஓர் தனிக் கட்சி! புதுமைப் பெண்களுக்கு தாங்கள் தரும் புதுமையான யோசனை!
    Tha.ma - 7

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  10. சிறந்த பகிர்வு
    சிறந்த கவிதை...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  11. சிறப்பான கவிதை.

    மகளிர் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete