உலகப் பெண்கள் தினம்
உலகப் பெண்கள் தினம்பற்றி-மிக
உயர்ந்த மேடையில் பறைசாற்றி!
திலகம் அடடா அவரென்றே-நாம்
தினமும் போற்றுதல் மிகநன்றே!
ஆனால்,
மகளிர்க் கென்றே ஒதுக்கீடும்-ஏனாம்
மக்கள் அவையில் குறுக்கீடும்
சகல கட்சிகள் ஒன்றாகி-பெரும்
சாதனை நிகழ்த்த நன்றாக!
புகல என்னத் தடையங்கே-ஆண்டுகள்
போனது பலவே விடையொங்கே?
மகளிர் கென்றே தனிக்கட்சி-உடன்
மகளிர் தொடங்கின் வருமாட்சி!
தொடங்க வேண்டும் இக்கணமே-மெகா
தொடரும் முடியும அக்கணமே!
அடங்கும் ஆணின் ஆதிக்கம்-பெண்கள்
அணியெனத் திரண்டால சாதிக்கும்!
செய்வீரா--?
புலவர் ச இராமாநசம்
மீள் பதிவு- 2011
பெண்ணுக்கு பெண்ணே எதிரி ஆகாமல் போனால் முன்னேற்றம் காணலாம் !
ReplyDeleteத ம +1
சர்வதேச மகளின் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...
ReplyDeleteமகளிர்கட்சி... நல்ல யோசனைதான்...
ReplyDeleteமகளிர் தின வாழ்த்துக்கள்...
ஆணாதிக்கம் எல்லாம் குறைந்து விட்டதய்யா...
ReplyDeleteஇப்போ பெண்ணுக்கு பெண்தான் எதிரியே...
நல்ல கவிதை...
மகளிர் தின வாழ்த்துக்கள்...
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteஆழமான கருத்துடன் கூடிய
ReplyDeleteஅற்புதமான கவிதையினை
மகளிர் தின சிறப்புப் பதிவாகக் கொடுத்தமைக்கு
மனமார்ந்த நன்றி
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வீறு கொண்டெழுந்த மகளீர் தினக் கவிதை கண்டு மகிழ்ந்தேன்
ReplyDeleteஅருமையான நற் கருத்திற்குத் தலை வணங்குகின்றேன் .மிக்க
நன்றி ஐயா பகிர்வுக்கு .
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteமிக அருமையான கவிதை ஐயா! அற்புதமான கருத்தை, பெண்ணைப் போற்றும் கருத்தை பகிர்ந்ததற்கு!
ReplyDeleteநன்றி!
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteஅருமையான கருத்து ஐயா
ReplyDeleteநன்றி
மகளிர்க்கென்று ஓர் தனிக் கட்சி! புதுமைப் பெண்களுக்கு தாங்கள் தரும் புதுமையான யோசனை!
ReplyDeleteTha.ma - 7
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteசிறந்த பகிர்வு
ReplyDeleteசிறந்த கவிதை...
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteசிறப்பான கவிதை.
ReplyDeleteமகளிர் தின நல்வாழ்த்துகள்.
வருகைக்கு மிக்க நன்றி!
Delete