Friday, March 7, 2014

என் முகநூலில் முகம் காட்டிய முத்துக்கள்!





ஒருவர், யாரிடமும் அளவின்றி உதவிகளை எதிர் பார்க்கக் கூடாது! அதுபோலவே, யாருக்கும் அளவின்றி உதவிகளைச் செய்யக் கூடாது!

உலகத்திலுள்ள , எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் (அருள்) காட்டி வாழ்கின்ற ஒருவனுக்கு தன் உயிரைக் காப்பதுபற்றி அச்சப்படத் தேவையில்லை!

மன்னுயிர் ஓம்பி அருள்வார்க் கில்பென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை- குறள்

உங்கள் குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டுமா! அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் வரவு எவ்வளவோ அதற்குள் உங்கள் செலவும் அடங்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்! வீண்செலவுகளே குடும்ப அமைதியைக் கெடுக்கும்

குடும்பத்தில் கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ, சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் அறவே கூடாது . அதனால்
இருவரிடையே உள்ள உறவு கெடும்! மேலும் குடும்பத்தில் அமைதி நிலவ, சகிப்புத் தன்மை ,விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகிய மூன்றும் இருவரிடத்தும் அவசியம் தேவை!

இன்று நாடெங்கும் நாள்தோறும் அரசியல், அல்லது இலக்கியம் சார்ந்த மேடைகளில் சொற்பொழிவு நடந்து கொண்டுதான் இருக்கின்றன! ஆனால் அச் சொற்பொழிவு எப்படி இருக்க வேண்டுமென்றால், கேட்கின்ற மக்கள் தம்மை மறந்து , அச் சொற்பொழிவில் மயங்கி ஈடுபாடு காட்டுவதாக இருக்க வேண்டும்! மேலும் அச் சொற்பொழிவை நேரில் கேட்காதவர்களும், தாம் கேட்க இயலாமல் போய்விட்டதே என்று ஏங்கி விரும்புவதாக இருக்க வேண்டும்

கேட்டார்ப் பிணிக்கும் தகைஅவாய்க் கேளாரும்
வேட்ப .மொழிவதாம் சொல்குறள்

ஆற்றின் நீர் ஓடிக்கொண்டே இருந்தால் தான் , நீர் தூய்மையாக இருக்கும்! தென்றல் மென்மையாக, வீசிக் கொண்டே இருந்தால் தான் இதமாக இருக்கும்! அதுபோல
மனிதருடைய உள்ளத்திலும் எழும் எண்ணங்களும் நேர்மையும், உண்மையும் கொண்டு, ஓடுகின்ற நீராக, வீசுகின்ற தென்றலாக இருப்பின் வாழ்வு தூய்மையாக
அமையும்!

                    புலவர்  சா  இராமாநுசம்

10 comments:

  1. முத்துக்கள் வாழ்வியற் சொத்துக்கள்
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  2. சிறப்பான குறளுடன் அருமையான கருத்துக்கள் ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  3. #குடும்பத்தில் கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ, சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் அறவே கூடாது . அதனால்
    இருவரிடையே உள்ள உறவு கெடும்!#
    என் தளத்தில் இன்று இதனை படித்த உணர்ந்த தம்பதிகள்அறிமுகமாகி உள்ளார்கள் அய்யா !
    த ம +1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  4. வாழ்வுக்குகந்த சிறப்பான முத்துக்கள் .பகிர்வுக்கு மிக்க
    நன்றி ஐயா .த .ம .5

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  5. அருமையான முத்துக்கள்.....

    இங்கும் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  6. வருகைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete