அதிகார போட்டியால் ஏழு பேரே –விடுதலை
ஆகாமல் , தவிக்கின்றார்!! அறியும் ஊரே!
இதுகாறும் பெற்றதுயர் போதா தென்றா –மேலும்
இவ்வாறு செய்வது! ஈகோ ! நன்றா!
மதுவுண்டு தள்ளாடும் மனிதர் போன்றே-சட்டம்
மயக்கத்தில் தள்ளாட , காணல் சான்றே!
எதுவுண்டு இந்நிலை மாற்றும் வழியே –வரும்
எதிர்காலம் தீர்காத இந்தப் பழியே!
புலவர் சா இராமாநுசம்
இதிலும் அரசியல் செய்யும் மனிதாபிமானம் அற்றவர்களுக்கு வரும் தேர்தல் பாடம் புகட்டும் !
ReplyDeleteத ம 1
விரைவில் நல்ல மாற்றம் வரும்... வர வேண்டும் ஐயா...
ReplyDeleteசமகால நிகழ்வுகளைக் கவிதை யாக்கி,
ReplyDelete......... சட்டத்தை, திட்டத்தை, மாற்றிப் பார்க்கும்
எமகாத கச் செயலை எடுத்து ரைத்தீர்
......... எண்சீராம் விருத்தத்தில், நன்றி அய்யா!
This comment has been removed by the author.
Deleteஎண்சீராம் விருத்தத்தில்
Delete.......................புதுமை சேர்த்து - நல்ல
....... எதுகைமோ னைக்காக
.......................வளைந்தி டாமல்,
ஒண்சீராம் தனிச்சொல்லைச்
.......................சேர்த்து -கவியில்
....... ஒளியேற்றி மனிதத்தை
........................உயர்த்தி விட்டீர்!
(தட்டச்சில் கவிவடிவம்
........................மாறிப் போச்சு -எனவே
வெட்டித்தான் திருத்திட்டேன்
........................வேறொன் றில்லை
குட்டித்தான் திருத்தித்தான்
........................ பயிற்சி தந்தீர்! -இன்னும்
குறையுடனே வளர்கின்றேன்
......................... மன்னிப் பீரே!)
சிறந்த பகிர்வு வரவேற்கிறேன்.
ReplyDeleteஉங்களுடைய கவிதை ஆட்சியாளர்களுக்கு சவுக்கடி!!!
ReplyDeleteஐயாவின் கவிதையும் அருமை!!
சட்டம் ஒரு கழுதை அன்றோ? அது மெல்ல மெல்லத் தான் நகரும், அதுவும், தன்னுடைய வேகத்தில்தான்!
ReplyDeleteநீதி நிட்சயம் வெல்லும் என்று உறுதியாக எண்ணுவோம் .
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .
அருமை ஐயா
ReplyDeleteத.ம.7
ReplyDelete