Monday, March 31, 2014

செய்வீரா ! நீங்கள் செய்வீரா! -செய்து உய்வீரா நீங்கள் உய்வீரா!



செய்வீரா ! நீங்கள் செய்வீரா! -செய்து
உய்வீரா நீங்கள் உய்வீரா!

வருகின்ற தேர்தலில்
தருகின்ற வாக்கினை-ஆய்ந்து
தருவீரா நீங்கள் தருவீரா!
புரிவீரா நீங்கள் புரிவீரா -இனி

செய்வீரா ! நீங்கள் செய்வீரா!-செய்து
உய்வீரா நீங்கள் உய்வீரா!

ஏமாற்ற இலவசம்
என்பதே! உணர்ந்துடன் –பதவி
தாமற்ற தருவதே உணர்வீரா!
நாமற்ற யாதென உணர்வீரா- உடன்

செய்வீரா ! நீங்கள் செய்வீரா!-செய்து
உய்வீரா நீங்கள் உய்வீரா!

தரமில்லா கூட்டணி
தகவில்லா காட்சிகள் நமக்கு
வரமல்ல! சாபமே அறிவீரா!
நிறம்மாறும் பச்சேந்தி! புரிவீரா!-என

செய்வீரா ! நீங்கள் செய்வீரா!-செய்து
உய்வீரா நீங்கள் உய்வீரா!


புலவர் சா  இராமாநுசம்

8 comments:

  1. "செய்வீரா ! நீங்கள் செய்வீரா!-செய்து
    உய்வீரா நீங்கள் உய்வீரா!" என்ற
    தேர்தல் நிலைமைகளை வரவேற்கிறேன்.
    மாற்றங்கள் வரவேண்டும்!

    ReplyDelete
  2. அறிந்தோமே !புரிந்தோமே!

    ReplyDelete
  3. அரசியல்கள் நம்மை ஏமாற்றுகிறது என்று ஒவ்வொருவரும் உணர்ந்துவிட்டால் நம் நாடுதான் வல்லரசாகிவிடுமே...

    உணரும் நாள் வரும்... புதிய இந்தியா மலரும்.. இலவசங்கள் இல்லாமல்...

    ReplyDelete
  4. தரமில்லா கூட்டணி
    தகவில்லா காட்சிகள் நமக்கு
    வரமல்ல! சாபமே அறிவீரா!
    நிறம்மாறும் பச்சேந்தி! புரிவீரா!//

    அறிந்து கொண்டோம்! புரிந்து கொண்டோம்! ஆனால் என்ன செய்யா புலவரே! நம் நாட்டின் நிலைமை அது தானே! இதை உணர்ந்து நம் மக்கள் திருந்தி, நாடு சர்வதேச உலகில் முதன்மையாவது எப்போதோ?!!!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  5. உணர வேண்டிய பச்சேந்திகள் உணரும் நாள் வர வேண்டும் ஐயா...

    ReplyDelete
  6. இரண்டு பழமும் விஷம். இதில் ஒன்றைத் தான் சாப்பிட வேண்டும் என்ற நிர்பந்தம். என்ன செய்வது புலவர் ஐயா?

    ReplyDelete
  7. இப்படிப் பட்ட பச்சோந்திகளைப் பார்க்கையில் இது என்ன ஜனநாயகம் என்றே என்ன தோன்றுகிறது ?
    த ம 7

    ReplyDelete
  8. எல்லோருமே இப்படி இருந்தால் என்ன செய்வது என்ற நிலை தான் இப்போது...

    த.ம. +1

    ReplyDelete