Saturday, March 22, 2014

அரசியல் நமக்கு அவசியமே!(அருணாவின் விருப்பம் ! நிறைவேற, பாடிய பாடல்)



அரசியல் நமக்கு  அவசியமே !-நல்லோர்
    ஆட்சிக்கு  வருவதும் அவசியமே!
பரம்பரை நீங்குதல் அவசியமே! –பதவி
    பண்புளார்  தாங்குதல்  அவசியமே!

மன்னர் ஆட்சி முடிந்தாலும் –நல்
    மக்கள் ஆட்சி  மலர்ந்தாலும்
என்ன பலன்தான் கண்டோமே –இன்னும்
   ஏழைகள் அதிகமாய்  கொண்டோமே!

பாலும் தேனும் தெருவெங்கும் –விரைந்து
   பாய நாட்டில் வளமோங்கும்!
நாளும் சொல்லியே நம்பவைத்தார் –ஆனால்
   நாடாளச் சென்றவர் வெம்பவைத்தார்!
வீதிக்கு  நடுவில்  மதுக்கடையே –பெண்கள்
    வீதியில்  நடப்பர்  பயத்திடையே!
நீதிக்கும் நேர்மைக்கும்   இடமில்லை! –கொள்ளை
    நிகழா நாளோ  ஏதுமில்லை!

குற்றம்  ஆள்வோர் மட்டுமல்ல –இலஞ்சம்
    கொடுக்கா மனிதர்  யார்சொல்ல
உற்றே நோக்கின்  நம்மைநாம் –நன்கு
    உள்ளம் காட்டும் உண்மைதனை

      புலவர்  சா  இராமாநுசம்
   

19 comments:

  1. இந்த ஜனநாயகம் என்பது நம் தலையில் நாமே மண்ணை போட்டு கொள்வதுதானா ?
    த ம 1

    ReplyDelete
  2. மக்கள் ஆட்சி மலர்ந்தாலும்
    என்ன பலன்தான் கண்டோமே –இன்னும்
    ஏழைகள் அதிகமாய் கொண்டோமே!

    ReplyDelete
  3. "முதலில் நம்மை நாம் பலவற்றில் மாற்றி திருத்திக் கொள்ளவேண்டும்" என்பதை அருமையாக சொன்னீர்கள் ஐயா...

    ReplyDelete
  4. நாடாளும் நல்லதொரு மனிதனை நாமே தீர்மாணிப்போம்
    வல்லரசு பாரதத்தை நாமே அமைப்போம்.
    நல்லதொரு கவிதை நயம்பட உறைத்தீர்!.
    நன்றி அய்யா!.

    ReplyDelete
  5. நம் நாடு ஜனநாயக நாடு என்று சொல்லி கொள்வதில் அர்த்தமே இல்லை என்றுதான் தோன்றுகின்றது! பெரும் முதலைகளின் ஆட்சி நடக்கும்வரை!

    அருமையான கருத்துள்ள கவிதை! ஐயா!

    ReplyDelete
  6. அருமையான கவிதை ஐயா நன்றி

    ReplyDelete
  7. அருமையான கவிதை ஐயா

    mikka nandri ayya.

    ReplyDelete
  8. அருமையான கவிதை. நாமும் திருத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறையவே.....

    ReplyDelete
  9. அருமையான் கவிதை ஐயா! தாங்களின் எதிபார்ப்பு நல்ல ஆட்சியாக அமையட்டும்.

    ReplyDelete
  10. சிறப்பான கவிதை வரிகள் பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .
    த.ம 1

    ReplyDelete
  11. மாற்றம் தனி மனிதனிடத்தில்தான் தொடங்கவேண்டும்.
    சிறப்பான கவிதை ஐயா

    ReplyDelete
  12. "அரசியல் நமக்கு அவசியமே !-நல்லோர்
    ஆட்சிக்கு வருவதும் அவசியமே!
    பரம்பரை நீங்குதல் அவசியமே! –பதவி
    பண்புளார் தாங்குதல் அவசியமே!" என்ற
    அடிகளை விரும்புகிறேன்.

    ReplyDelete