அரசியல் நமக்கு அவசியமே !-நல்லோர்
ஆட்சிக்கு
வருவதும் அவசியமே!
பரம்பரை நீங்குதல்
அவசியமே! –பதவி
பண்புளார்
தாங்குதல் அவசியமே!
மன்னர் ஆட்சி
முடிந்தாலும் –நல்
மக்கள் ஆட்சி மலர்ந்தாலும்
என்ன பலன்தான்
கண்டோமே –இன்னும்
ஏழைகள் அதிகமாய் கொண்டோமே!
பாலும் தேனும்
தெருவெங்கும் –விரைந்து
பாய நாட்டில் வளமோங்கும்!
நாளும் சொல்லியே
நம்பவைத்தார் –ஆனால்
நாடாளச் சென்றவர் வெம்பவைத்தார்!
வீதிக்கு நடுவில்
மதுக்கடையே –பெண்கள்
வீதியில்
நடப்பர் பயத்திடையே!
நீதிக்கும்
நேர்மைக்கும் இடமில்லை! –கொள்ளை
நிகழா நாளோ
ஏதுமில்லை!
குற்றம் ஆள்வோர் மட்டுமல்ல –இலஞ்சம்
கொடுக்கா மனிதர் யார்சொல்ல
உற்றே நோக்கின் நம்மைநாம் –நன்கு
உள்ளம் காட்டும் உண்மைதனை
புலவர்
சா இராமாநுசம்
இந்த ஜனநாயகம் என்பது நம் தலையில் நாமே மண்ணை போட்டு கொள்வதுதானா ?
ReplyDeleteத ம 1
மிக்க நன்றி!
Deleteமக்கள் ஆட்சி மலர்ந்தாலும்
ReplyDeleteஎன்ன பலன்தான் கண்டோமே –இன்னும்
ஏழைகள் அதிகமாய் கொண்டோமே!
"முதலில் நம்மை நாம் பலவற்றில் மாற்றி திருத்திக் கொள்ளவேண்டும்" என்பதை அருமையாக சொன்னீர்கள் ஐயா...
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteநாடாளும் நல்லதொரு மனிதனை நாமே தீர்மாணிப்போம்
ReplyDeleteவல்லரசு பாரதத்தை நாமே அமைப்போம்.
நல்லதொரு கவிதை நயம்பட உறைத்தீர்!.
நன்றி அய்யா!.
நம் நாடு ஜனநாயக நாடு என்று சொல்லி கொள்வதில் அர்த்தமே இல்லை என்றுதான் தோன்றுகின்றது! பெரும் முதலைகளின் ஆட்சி நடக்கும்வரை!
ReplyDeleteஅருமையான கருத்துள்ள கவிதை! ஐயா!
சரியா சொன்னீங்க .
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஅருமையான கவிதை ஐயா நன்றி
ReplyDeleteத.ம.8
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஅருமையான கவிதை ஐயா
ReplyDeletemikka nandri ayya.
அருமையான கவிதை. நாமும் திருத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறையவே.....
ReplyDeleteஅருமையான் கவிதை ஐயா! தாங்களின் எதிபார்ப்பு நல்ல ஆட்சியாக அமையட்டும்.
ReplyDeleteசிறப்பான கவிதை வரிகள் பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .
ReplyDeleteத.ம 1
மாற்றம் தனி மனிதனிடத்தில்தான் தொடங்கவேண்டும்.
ReplyDeleteசிறப்பான கவிதை ஐயா
மிக்க நன்றி!
Delete"அரசியல் நமக்கு அவசியமே !-நல்லோர்
ReplyDeleteஆட்சிக்கு வருவதும் அவசியமே!
பரம்பரை நீங்குதல் அவசியமே! –பதவி
பண்புளார் தாங்குதல் அவசியமே!" என்ற
அடிகளை விரும்புகிறேன்.