கூட்டணிக் குழப்பங்கள் ஓய்ந்தனவே – கட்சி
கொள்கைகள் முற்றும் மாய்ந்தனவே!
ஓட்டினி கேட்டவர் வந்திடுவார் –மேலும்
ஒருசிலர் நோட்டினைத் தந்திடுவார்!
ஆட்டமே களைகட்டும்! பாருமிங்கே- நடக்கும்
அரசியல் வேடிக்கை! ஊதசங்கே!
நாட்டையே மேன்மேலும் நாசமாக்கும் –நாளும்
நஞ்சென விலைவாசி மோசமாக்கும்!
வாணிகம் ஆயிற்றே தேர்தலின்றே –மக்கள்
வளமுற வாழ்கின்ற நாளுமென்றே!
நாணிடும் உள்ளமே காணவில்லை –ஏனோ
நல்லவர் அக்கரைப் பூணவில்லை!
தேன்தேடி மலரெங்கும் திரியும்வண்டே-பதவித்
தேன்தேடும் பித்தராம் ! திரியக்கண்டே!
ஏனில்லை மாற்றமே! நம்மிடையே – வருமா
எழுச்சியும் ஆற்றலும் நம்மிடையே!
புலவர் சா இராமாநுசம்
#ஏனில்லை மாற்றமே!#
ReplyDeleteமாற்றம் வரும் ம்ம்ம்ம் ,ஆனா வராது !
த ம 2
நன்றி!
Delete"ஏனில்லை மாற்றமே! நம்மிடையே – வருமா
ReplyDeleteஎழுச்சியும் ஆற்றலும் நம்மிடையே!" என்ற
அடிகளையே அடியேன் விரும்புகிறேன்!
மாற்றம் வரவேண்டும்... வரும் ஐயா...
ReplyDeleteநன்றி!
ReplyDelete"வாணிகம் ஆயிற்றே தேர்தலின்றே"....
ReplyDeleteஓட்டினி கேட்டவர் வந்திடுவார் –மேலும்
ReplyDeleteஒருசிலர் நோட்டினைத் தந்திடுவார்!
ஐயோ.... நான் இந்தியாவில் இல்லையே....
ஓட்டுக்கு விலைபேசுவதை பார்க்க.....
அனைவர் மனத்திலும் இருக்கும்
ReplyDeleteஆதங்கத்தை அற்புதமான கவியாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நன்றி!
Deleteவெற்றி பெற வேண்டும் என்ற ஒரே கொள்கையை உடையவர்கள்
ReplyDeleteத.ம.9
ReplyDeleteநன்றி!
Deleteசிறப்பான பகிர்வு!
ReplyDeleteத.ம.
நன்றி
Deleteவீறு கொண்டு எழுந்த கவிதை வரிகளைக் கண்டு
ReplyDeleteதேறுவாரா உலகினில் நன் மக்களும் இன்று !!
உள்ளக் கிடக்கையில் உள்ள நற் செய்திகளை
அள்ளி அள்ளி வழங்கும் மனம் வாழ்க வாழ்க என்று
வாழ்த்துகிறது ஐயா .தங்களைப் போன்றவர்கள்
அரசிலில் இனியேனும் வர மாட்டார்களா அல்லலுறும்
மக்களின் துயர் துடைக்க ?..!!
நன்றி
Deleteதேர்தல் முடிவுகள் வந்த பிறகு மீண்டும் நடக்கும் ஒரு பேரம். அப்போது மீண்டும் சில கூட்டணிகள் உருவாகும்! :(
ReplyDeleteத.ம. +1
நன்றி
Deleteஅருமை.
ReplyDeleteஎன்ன சொன்னாலும் 90 சதவிகிதம் பேர் காசு வங்கிக் கொண்டு ஓட்டு போடத்தான் செய்கிறார்கள்.
நன்றி
Delete